நாடாளுமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரின் கடைசி நாளான ஆகஸ்ட் 11-ம் தேதி வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, எதிர்க்கட்சிகளை சேர்ந்த சில எம்.பி.க்கள் நாடாளுமன்ற மரபை மீறி மேஜைகள் மீது ஏறியும், கோஷங்களை எழுப்பியும், கோப்புகளை தூக்கி எறிந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாடாளுமன்ற மாண்பை மீறும் வகையில் செயல்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்களான காங்கிரஸ் எம்.பி.க்கள் 6 பேரும், திரிணமூல், சிவசேனை கட்சிகளைச் சோ்ந்த தலா இரண்டு எம்.பி.க்களும், மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சோ்ந்த தலா ஒரு எம்.பி. மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நாடாளுமன்ற விவகாரத்துறை பரிந்துரை செய்தது.

இதனை தொடர்ந்து நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று கூடிய நிலையில் கடந்த கூட்டத்தொடரில் நாடாளுமன்ற மாண்பை மீறும் வகையில் செயல்பட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 13 பேரையும் கூட்டத்தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்வதாக அவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் அறிவித்தார். சஸ்பெண்ட் செய்யப்பட்ட 13 எம்.பி.க்களும் குளிர்கால கூட்டத்தொடரின் எஞ்சிய அமர்வுகளில் கலந்துகொள்ளக்கூடாது என அவை துணைத்தலைவர் அறிவித்தார்.

இந்நிலையில், 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளர். நாடாளுமன்றம் இன்று கூடியதும் 12 எம்.பி.க்கள் மீது விதிக்கப்பட்ட சஸ்பெண்ட் நடவடிக்கையை திரும்பப்பெற வேண்டும் என்று மக்களவை சபாநாயகர் வெங்கையா நாயுடுவிடம் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால், அந்த கோரிக்கையை சபாநாயகர் வெங்கையா நாயுடு நிராகரித்துவிட்டார்.

இதனை தொடர்ந்து நடப்பு கூட்டத்தொடரில் இருந்து 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்திசிலை முன் எதிர்க்கட்சிக்கள் ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons