தருமபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகே உள்ள ஒரு வீட்டில் பாலினம் கண்டறியும் ஸ்கேன் இயந்திரம் வைத்து கர்ப்பிணி பெண்களுக்கு சட்டவிரோதமாக சோதனை செய்து வருவதாக ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் சாந்திக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, அங்கு நடைபெற்ற சோதனையில் இடைத்தரகர் வடிவேல், கற்பகம் என்பவர்களை ஊரக நலப் பணிகள் துறை இணை இயக்குனர் சாந்தி தலைமையிலான மருத்துவ குழுவினர் பிடித்தனர். மேலும், அவர்களிடமிருந்து, பாலினம் கண்டறியும் இயந்திரம், ரூ. 18 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்து மகேந்திரமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பின்னர், மகேந்திரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். இதில், சம்பந்தப்பட்ட மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
The short URL of the present article is: https://reportertoday.in/eqlm