சென்னை,
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்திற்கு நேற்று மாலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அப்போலோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதயத்திற்கு செல்லும் ரத்த நாளத்தில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இந்த நிலையில், அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நடிகர் ரஜினிகாந்தின் இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாயில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த வீக்கம் அறுவை சிகிச்சையின்றி அகற்றப்பட்டது. ரத்தக்குழாய் வீக்கத்திற்கான சிகிச்சைக்கு ஸ்டன்ட் (STENT) பொருத்தப்பட்டுள்ளது. தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் வீடு திரும்புவார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The short URL of the present article is: https://reportertoday.in/0e45