சென்னை:தமிழக பாரதிய ஜனதா ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-தமிழ்நாட்டில் மதுக்கடைகளை திறந்தவர்கள் தான் மூட வேண்டுமே தவிர மத்திய அரசு மூடாது. விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாடு என்பது அரசியல் மோசடி மாநாடு. மக்களை ஏமாற்றும் மோசடி.அறநிலையத்துறை புனரமைப்பு செய்த கோவில்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 15 சதவீத வாக்குகளை இழந்துள்ளது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பாதையில் அ.தி.மு.க. செல்கிறதா? என அக்கட்சி தொண்டர்கள் நினைத்திருக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
The short URL of the present article is: https://reportertoday.in/gcva