போலாம் ரைட்டு.. அரசு பஸ்சை மாமியார் வீட்டுக்கு ஓட்டிச் சென்ற நபர்.. கடைசியில் காத்திருந்த டுவிஸ்ட்*

 

ஆந்திர பிரதேசத்தில் ஆத்மகுரு மண்டலத்திற்கு உட்பட்ட வேங்கடாபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் துர்க்கையா. வாகன ஓட்டுநராக இருந்து வருகிறார்.இவர், நந்தியால் மாவட்டத்தில் முச்சுமர்ரி பகுதியை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்திருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன் அவரது மனைவி சொந்த ஊருக்கு சென்றிருந்தார். அவரை காண ஊருக்கு செல்லலாம் என துர்க்கையா முடிவு செய்துள்ளார்.ஆனால் அவரிடம், போதிய பண வசதி இல்லை. அப்போது அதிர்ஷ்டம் வேறு வடிவில் வந்துள்ளது. ஆத்மகுரு பஸ் நிலையத்தில் யாரும் கேட்பாரின்றி அரசு பஸ் ஒன்று தனியாக நின்றிருக்கிறது. அதன் சாவிகளும் பஸ்சிலேயே இருந்துள்ளன.இதனைப் பார்த்த ஓட்டுநரான துர்க்கையாவுக்கு உடனடியாக யோசனை ஒன்று வந்துள்ளது. ஊரிலுள்ள மனைவியை காண அந்த பஸ்சை ஓட்டி செல்வது என முடிவு செய்திருக்கிறார். அரசு பஸ்சில் ஏறி அதனை இயக்கி, மாமியார் வீட்டுக்கு சென்றார்.ஆனால், சந்தேகத்திற்குரிய வகையில், ஆட்கள் யாருமில்லாமல் தனியாக சென்ற அரசு பஸ்சை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். விசாரணையில், அரசு பஸ்சை அங்கீகாரமின்றி பயன்படுத்தியதற்காக, துர்க்கையாவை போலீசார் கைது செய்தனர்.எனினும், அவருக்கு மனநல பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என அவருடைய குடும்பத்தினரும், உறவினர்களும் கூறுகின்றனர். டெப்போவில் இருந்து அரசு பஸ் காணாமல் போயுள்ளது என அதிகாரிகளிடம் அதன் ஓட்டுநர் புகாராக தெரிவித்து இருக்கிறார்.இதன் அடிப்படையிலும், சி.சி.டி.வி. காட்சிகளை கொண்டும் போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து துர்க்கையாவிடம் இருந்த அரசு பஸ்சை போலீசார் பறிமுதல் செய்தனர். அரசு பஸ் பின்னர், ஆத்மகுரு டெப்போ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. துர்க்கையா மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதற்காக அவருக்கு எதிராக போலீசார் வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை.

 

The short URL of the present article is: https://reportertoday.in/8geo

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons