பூமியைப் போல் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற தன்மைகளைக் கொண்ட வெளிப்புற கிரகம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சூரியனைச் சுற்றும் கிரகங்கள் சூரியக் குடும்பத்தில் அடங்கும். அதுபோல கூறிய குடும்பத்திற்கு வெளியில் உள்ள நட்சத்திரங்களைச் சுற்றும் கண்டுபிடிக்கப்படும் கிரகங்கள் வெளிப்புற கோள்கள் [எக்ஸோபிளானட்ஸ்] என்று அழைக்கப்டுகின்றன. இதுவரை இதுபோல 5,600 வெளிக்கோள்கள் மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் நட்சத்திர மண்டலத்தில் 40 ஒளியாண்டுகள் தொலைவில் உயிர்கள் வாழ்வதற்கான தன்மைகளைக் கொண்ட புதிய வெளிப்புறக் கிரகத்தை நாசாவின் எக்சோபிளானட் சர்வே சாட்டிலைட் [TESS] என்ற தொலைநோக்கி மூலம் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய கோளுக்கு Gliese 12b என்று பெயரிடப்பட்டுள்ளது. டுவார்ப் விண்மீனை ஒருமுறை சுற்றிவர இந்த கிரகம் 12.8 நாட்கள் எடுத்துக்கொள்கிறது. பூமி மற்றும் வீனஸ் [வெள்ளி] ஆகிய கிரங்களின் எடைகளுக்கு இடைப்பட்ட எடையில் உள்ள Gliese 12b கிரகத்தில் திரவ நீர் இருக்க அதிகம் வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சூரியனின் எடையில் 26 சதவீதம் உள்ள Gliese 12b கிரகத்தில் 42° செல்ஸியஸ் தட்பவெப்பம் காணப்படுகிறது. திரவ நீர் மற்றும் உயிர்கள் வாழ்வதற்கான தட்பவெப்பம் ஆகியவை ஒருங்கே அமைந்த இந்த புதிய கிரகம் குறித்து விஞ்ஞானிகள் மேற்கொண்டு ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

The short URL of the present article is: https://reportertoday.in/qgvl

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons