புவனேஸ்வர்:ஒடிசாவின் புரி மாவட்டத்தின் பிபிலி பகுதியில் பறவைக்காய்ச்சல் வைரஸ் பரவல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து மாநில அரசு தீவிர தடுப்பு நடவடிக்கையில் இறங்கியது. இது தொடர்பாக சுகாதாரத்துறை சார்பில் உஷார் நிலையும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பிபிலி பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளை கொன்று அழிக்கும் பணிகள் நடந்தது. இந்த பணிகளுக்காக 13 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன. மேலும் சில பண்ணைகளில் உரிமையாளர்களே இந்த பணிகளை மேற்கொண்டனர். கடந்த 23-ந்தேதி தொடங்கிய இந்த பணிகள் நேற்று மாலையில் நிறைவடைந்தது. இதில் மொத்தம் 11,700 கோழிகள் கொன்றழிக்கப்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.இதன் தொடர்ச்சியாக அருகில் உள்ள வீடுகள் மற்றும் கிராமங்களில் கோழிகளை அழிக்கும் பணிகள் இன்று நடைபெறும் என்று கூறப்பட்டு உள்ளது.
The short URL of the present article is: https://reportertoday.in/auc3