சென்னை:த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு அமைப்பின் சார்பில், அரசாணை 243-ஐ ரத்து செய்திட வேண்டும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். கடந்த 2023-ல் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் டிட்டோஜாக் அமைப்புடன் நடத்திய பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொண்ட 12 கோரிக்கைகளின் மீது உடனடியாக ஆணைகள் பிறப்பிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் இன்னும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.எனவே டிட்டோஜாக் சார்பில் வருகிற 10-ந்தேதி நடைபெறும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்திலும், வருகிற 29, 30 மற்றும் அக்டோபர் 1 ஆகிய மூன்று நாட்கள் சென்னையில் நடைபெறும் கோட்டை முற்றுகைப் போராட்டத்திலும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முழுமையாகப் பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் ஆசிரியர்களின் கற்பித்தல் மற்றும் மாணவர்களின் கற்றல் பெரிதும் பாதிக்கும். எனவே தமிழக அரசு ஆசிரியர்களை போராட்டக் களத்திற்கு தள்ளுவதற்கு பதிலாக அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற உரிய நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The short URL of the present article is: https://reportertoday.in/hf1b