சேலம்:அதிமுகவின் அமைப்புச்செயலாளராக இருக்கும் செஞ்சி ராமச்சந்திரனை விஜய் கட்சியின் அவைத்தலைவராக நியமனம் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:* தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசு மருத்துவமனைகள் சீர்கேடாக உள்ளன.* அரசு மருத்துவமனைகளில் உள்ள குறைபாடுகளை அரசு சரி செய்ய வேண்டும்.* எதிர்க்கட்சிகள் கூறும் கருத்துக்களை கேட்டு அவற்றை சரிசெய்ய அரசு முன்வர வேண்டும்.* செஞ்சி ராமச்சந்திரன் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைகிறார் என்ற செய்தி வதந்தி.* அதிமுக வலிமையான கட்சி என்பதால் அவதூறு பரப்புகின்றனர்.* மக்கள் என்னிடம் கோரிக்கை வைக்கிறார்கள், அதன் அடிப்படையில் அறிக்கை வெளியிடுகிறோம்.* நாங்கள் கூறும் குறைகளை களைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர அறிக்கை வெளியிடுவதை குறை கூறக்கூடாது.* அரசு மருத்துவமனைகளில் சுகாதாரமற்ற சூழல் நிலவுகிறது. அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

The short URL of the present article is: https://reportertoday.in/8e49

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons