விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, பல்வேறு மாவட்டங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜை செய்து ஊர்வலங்கள் நடைபெற்றன.
நாகப்பட்டினம் காயாரோகண சுவாமி கோவிலில் 32 அடி உயர அத்தி மரத்தாலான விஸ்வரூப விநாயகர் சிலை மங்கள இசையுடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலின் ராஜகோபுரம் முன்பு 10 அடி உயரம் கொண்ட சிங்கமுக வாகன விநாயகர் சிலைக்கு இளைஞர்கள் பிரம்மாண்ட மாலை அணிவித்து வாண வேடிக்கையுடன் பூஜை செய்து வழிபட்டனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூரில் 10 அடி உயரம் கொண்ட விநாயகர் சிலை இரண்டு லட்ச ரூபாய் மதிப்பிலான ரூபாய் நோட்டுக்களால் மாலை அணிவிக்கப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டன.
மயிலாடுதுறை மாவட்டத்தில் எரவாஞ்சேரி, சங்கரன்பந்தல், இலுப்பூர், உத்திரங்குடி உள்ளிட்ட பல்வேறு வண்ணங்களில், பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் வைத்து, பிரதிஷ்டை செய்து பூஜை செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் தீவனூர் சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவிலில், வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் கோவிலின் உட்பிரகாரத்தில் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
The short URL of the present article is: https://reportertoday.in/w0vc