டெல்லியில் வரும் 1-ம் தேதி இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை*
புதுடெல்லி:பாராளுமன்ற தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 486 தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்து விட்டது. 7-வது கட்டமாக 57 தொகுதிகளுக்கு வரும் ஒன்றாம் தேதி தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.இதையடுத்து, ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அன்று மதியம் மத்தியில் ஆட்சியைப் பிடிப்பது யார் என்பது உறுதியாகி விடும். பாராளுமன்றத்தில் மொத்தம் உள்ள 543 இடங்களில் 272 இடங்களை பெறும் கட்சி ஆட்சி அமைக்கும்.பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி 3-வது தடவையாக ஆட்சி அமைக்க தீவிரமாக உள்ளது. இந்தியா கூட்டணி தலைவர்கள் தாங்கள்தான் மத்தியில் ஆட்சியைக் கைப்பற்றுவோம் என கூறி வருகிறார்கள். இதனால் மத்தியில் யார் ஆட்சி அமையும் என்பதில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், வரும் 1-ம் தேதி இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் டெல்லியில் கூடி ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளனர். இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், தி.மு.க, சமாஜ்வாடி, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, ராஷ்டிரீய லோக்தளம் உள்பட 28 கட்சிகள் உள்ளன. இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு கூட்டணி கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.தேர்தல் முடிவுகள் எப்படி அமையும் என்பது பற்றியும், தேர்தல் முடிவுகளைப் பொறுத்து அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி விவாதித்து முடிவுசெய்ய உள்ளனர். பிரதமர் தேர்வு பற்றியும் இந்தக் கூட்டத்தில் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
🇮🇳 REPORTER TODAY🇮🇳 www.reportertoday.in
விரிவான செய்திகளை உடனுக்குடன் பெற 👇
(1) Magazine:👇 #REPORTER_TODAY
(2)download PlayStore Mobile App:👇 https://play.google.com/store/apps/details?id=com.reporter.reportertodaytamilnewsapp
(3) Website:👇 www.reportertoday.in
(4) Web TV:👇 #REPORTER_TODAY_TV
(5) Whatsapp Channel:👇 https://whatsapp.com/channel/0029Va5yoZN7z4kbmGf6ab1I
(6) YouTube:👇 https://youtube.com/@reportertodaytv896?si=N5ABE5EDKj3rFg5b
(7) Facebook Page:👇 https://www.facebook.com/profile.php?id=100067732053037&mibextid=ZbWKwL
(8) Twitter :👇 https://x.com/REPORTERTO93013?t=cV480ocgk1852SSWitK7sA&s=09
(9) Instagram: 👇 https://www.instagram.com/p/CyOT-_0P8lN/?igshid=NjZiM2M3MzIxNA==
தொடர்புக்கு: 📱9962515000
#ரிப்போர்ட்டர்_டுடே #REPORTER_TODAY #ரிப்போர்ட்டர் #டுடே #Reporter #Today #Trending #followers #Highlights
#BJP #CONGRESS #DMK #ADMK #AMMK #MDMK #NTK #VCK #PMK #DMDK #TNGOVT #CMO #TJU #ITWINK #POLITICAL
WWW.REPORTERTODAY.IN
தொடர்புக்கு: 📱9962515000