வேளச்சேரி:வேளச்சேரியில் உள்ள தனியார் பள்ளி சந்திப்பு அருகே இன்ஸ்பெக்டர் விமல் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் பெரிய பையுடன் வந்தார். அவரிடம் சோதனை செய்தபோது பையில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை கடத்தி வந்திருப்பது தெரிந்தது. விசாரணையில் அவர் அதே பகுதி பெரியார் நகரை சேர்ந்த முகமது அலிஜின்னா (38) என்பது தெரிந்தது. இதையடுத்து அவரது வீட்டிற்கு சென்று போலீசார் சோதனையிட்டனர். அங்கு மூட்டை, மூட்டையாக குட்கா, புகையிலை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர், வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து வெளி மாநிலங்களில் இருந்து தடைசெய்யப்பட்ட, புகை யிலை, குட்கா, பான்மசாலா, உள்ளிட்ட பொருட்களை வாங்கி வந்து பதுக்கி வைத்து வேளச்சேரி, ஆதம்பாக்கம் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு கடந்த ஒரு ஆண்டுக் கும் மேலாக விற்பனை செய்து வந்தது தெரிந்தது. இதையடுத்து முகமது அலிஜின்னாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 230 கிலோ குட்கா, புகையிலை பொருட் கள் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
The short URL of the present article is: https://reportertoday.in/py0s