சென்னை,

இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் இன்று இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனிடையே, இன்று ஞாயிற்று கிழமை என்பதால் மெரினாவில் நடைபெற்ற சாகச நிகழ்ச்சியை 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்டு களித்தனர்.

ஆனால், விமானப்படை சாகச நிகழ்ச்சி நிறைவடைந்த உடன் மக்கள் வீடு திரும்ப முயற்சித்தனர். லட்ச கணக்கில் மக்கள் வீடுகளுக்கு திரும்ப முயற்சித்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மெரினா கடற்கரை சாலை முழுவதும் மக்கள் கூட்டம் அலைமோதியதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ராதாகிருஷ்ணன் சாலை, அண்ணா சாலை, வாலாஜா சாலை, அடையாறு மேம்பாலம் உள்பட பல்வேறு பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். போதிய அளவில் பேருந்துகள் இயக்கப்படவில்லை என்றும் மக்கள் குற்றஞ்சாட்டினர்.

அதேபோல், புறநகர் ரெயில்களும் குறைவான அளவில் இயக்கப்பட்டதாக மக்கள் குற்றஞ்சாட்டினர். வேளச்சேரி – சென்னை கடற்கரை, சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே ரெயில் சேவை குறைவாகவே இயக்கப்பட்டதாக மக்கள் குற்றஞ்சாட்டினர். இன்று ஞாயிற்று கிழமை அட்டவணையில் ரெயில்கள் குறைவான எண்ணிக்கையில் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

The short URL of the present article is: https://reportertoday.in/0f36

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க

WhatsApp & Call Buttons