கஞ்சா வைத்திருந்தது தொடர்பான வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. தேனி பி.சி.பட்டி போலீசார மற்றும் மாவட்ட எஸ்.பி. பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சியர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது தொடர்பான உத்தரவு மதுரை சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. சவுக்கு சங்கர் நேற்று புழல் சிறையில் இருந்து மதுரை சிறைக்கு மாற்றப்பட்டிருந்தார்.சவுக்கு சங்கர் மீது ஏற்கனவே போடப்பட்ட குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருந்தது. இந்த நிலையில் மீண்டும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.பெண் போலீஸ்க்கு எதிராக அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். பின்னர் தேனி மாவட்டத்தில் தங்கியிருந்தபோது கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்தனர். அதன்பின் தொடர்ந்து பல வழக்குகள் அவர் மீது போடப்பட்டன.அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைத்து விசாரிக்கும்படி சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். கார் பந்தயம் முடியும் வரை நான் ஜாமினியில் வெளியில் வரக்கூடாது என உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனால் என்மீது தினந்தோறும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறார். எல்லா கைதுக்கும் காரணம் உதயநிதி ஸ்டாலின்தான் என சவுக்கு சங்கர் குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
The short URL of the present article is: https://reportertoday.in/g2pp