திருவனந்தபுரம்:மலப்புரத்தில் நிபா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவது கேரள மாநில மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் அங்கு குரங்கம்மை அறிகுறியுடன் வாலிபர் ஒருவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். நேற்று முன்தினம் வளைகுடா நாட்டில் இருந்து கேரள திரும்பிய அந்த நபர்,காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கிறார். மேலும் அம்மை நோய் போன்று கையில் தழுப்புகள் இருந்ததால் அவர் சிகிச்சை பெற மஞ்சேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். அப்போது அவருக்கு குரங்கம்மை நோய்க்கான அறிகுறிகள் இருந்ததை டாக்டர்கள் பார்த்தனர். இதனால் அவரது உடலில் இருந்து திரவ மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. பரிசோதனை முடிவில் தான் அந்த நபருக்கு குரங்கம்மை நோய் பாதிப்பு உள்ளதா? என்பது உறுதியாக தெரியவரும்.
The short URL of the present article is: https://reportertoday.in/bn9g