வாஷிங்டன்: ஐரோப்பிய நாடுகளுக்கு கூடுதல் வரி விதிப்பேன் என அமெரிக்கா அதிபராக தேர்வு செய்யப்பட்டு்ள்ள டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில், டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். அவர் வரும் 2025ம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி அமெரிக்கா அதிபராக பொறுப்பு ஏற்க உள்ளார். இந்த சூழலில், அவர் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
அதிபராக பொறுப்பேற்ற முதல் நாளில், கனடா, மெக்சிகோ, சீனா ஆகிய 3 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிப்பதற்கான ஆணையில் கையெழுத்திடுவேன்’ என டிரம்ப் அறிவித்து இருந்தார்.
தற்போது, ஐரோப்பிய நாடுகளுக்கு கூடுதல் வரி விதிப்பேன் என டிரம்ப் எச்சரித்துள்ளார். அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
அமெரிக்காவில் எண்ணெய் மற்றும் எரிவாயுவை பெரிய அளவில் வாங்குவதன் மூலம் மிகப்பெரிய பற்றாக்குறையை ஈடு செய்ய வேண்டும் என நான் ஐரோப்பிய ஒன்றியத்திடம் கூறினேன். இல்லையெனில், எல்லா வழிகளிலும் வரிகள் தான். இவ்வாறு டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.