அரியானா மாநிலத்தில் 90 சட்டமன்ற இடங்களுக்கு அடுத்த மாதம் 5-ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. ஒரே கட்டமாக அக்டோபர் 1-ந்தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்பின் 5-ந்தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.ஏற்கனவே பாஜக அரியானாவில் ஆட்சி செய்தி வருகிறது. பாஜக ஆட்சிக்கு எதிராக மக்களுக்கு எதிர்ப்பு இருப்பதாக காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் தெரிவித்து வருகின்றன. இதனால் இரண்டு கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட்டு ஆட்சியை பிடிக்க வேண்டும் என களத்தில் வேலை செய்து வருகின்றன.இதற்கிடையே காங்கிரஸ் மத்திய தேர்தல் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட ராகுல் காந்தி அரியானாவில் ஆம் ஆத்மி கட்சியுடன் இணைந்து போட்டியிட வாய்ப்புள்ளதா? என்பது குறித்து அரியானா காங்கிரஸ் தலைவர்களிடம் கேள்வி எழுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் ராகுல் காந்தி ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் பாஜக-வை வெல்ல முடியும் என நினைப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.அதேவேளையில் கடந்த மாதம் காங்கிரஸ் தலைவர் குமாரி செல்ஜா செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில், அரியானாவில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணிக்கு வாய்ப்பு என்ற கேள்வியை புறந்தள்ளினார். மாநிலத்தில் காங்கிரஸ்க்கு வலுவான வேட்பாளர்கள் உள்ளனர். நாங்கள் தனியாக தேர்தலை சந்திப்போம் என்றார்.இந்த வருட தொடக்கத்தில் டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், அரியானா சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி 90 இடங்களிலும் போட்டியிடும் என்றார்.மக்களவை தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் அரியானா, குஜராத், கோவா, டெல்லி, சண்டிகரில் கூட்டணி அமைத்து போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.அரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடோ, கார்கி சம்ப்லா-கிளோய் தொடரில் போட்டியிடுவார் எனக் கூறப்படுகிறது. அதேபோல் காங்கிரஸ் மாநில தலைவர் உதய் பான் ஹோடல் தொகுதியில் போட்டியிடலாம் எனவும் கூறப்படுகிறது.
The short URL of the present article is: https://reportertoday.in/oitx