தற்போது பாலிவுட் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக இருக்கும் பல நடிகை, நடிகர்களின் முதல் சம்பளம் எவ்வளவு என்பது பலருக்கு தெரியாது.
அதன்படி, தற்போது அமிதாப் பச்சன் முதல் ஷாருக்கான் வரை, பாலிவுட் நட்சத்திரங்களின் முதல் சம்பளம் எவ்வளவு என்பதை காணலாம்.
1.அமிதாப் பச்சன்
அமிதாப் பச்சன் பாலிவுட் சினிமாவின் பலம்பெரும் நடிகர். இவர் தற்போது ஒரு படத்திற்கு ரூ. 6 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. இவர் 1969-ம் ஆண்டு வெளியான ஹிண்டஸ்தானி படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் தனது முதல் சம்பளமாக இப்படத்திற்காக ரூ.500 வாங்கியுள்ளார்.
2. ஷாருக்கான்
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ஷாருக்கான். இவர் தொலைக்காட்சி தொடரில் வேலை செய்தபோது தனது முதல் சம்பளமாக ரூ.50 வாங்கியுள்ளார்.
3. சல்மான் கான்
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான் கான். இவர் பின்னணி நடனக் கலைஞராக நடனம் ஆட ரூ.75-யை தனது முதல் சம்பளமாக வாங்கியுள்ளார்.
4. பிரியங்கா சோப்ரா
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் பிரியங்கா சோப்ரா. இவர் தனது முதல் சம்பளமாக ரூ.5,000 வாங்கியுள்ளார்.
5. தீபிகா படுகோன்
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தீபிகா படுகோன். இவர் தனது முதல் சம்பளமாக ரூ.2,000 வாங்கியுள்ளார்.
The short URL of the present article is: https://reportertoday.in/i20e