மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் உயரிய விருதுகளான பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்தாண்டுக்கான விருதுகளை பெறுபவர்களின் பட்டியல் குடியரசு தினத்தை ஒட்டி நேற்று வெளியிடப்பட்டது.இதன்படி, மொத்தம் 139 பேர் பத்ம விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பத்ம விபூஷண் விருது ஏழு பேருக்கும், பத்ம பூஷண் விருது 19 பேருக்கும், பத்ம ஸ்ரீ விருது 113 பேருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு பத்ம பூஷணும், 10 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் நல்லி குப்புசாமி, நடிகர் அஜித்குமார், நடிகை ஷோபனா உள்ளிட்டோருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் மதுரையைச் சேர்ந்த பறை இசை கலைஞர் வேலு ஆசான், கிரிக்கெட் வீரர் அஸ்வின், புதுச்சேரி தவில் கலைஞர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.
‘தினமலர்’ நாளிதழின் இணை நிர்வாக ஆசிரியர் டாக்டர் ஆர்.லட்சுமிபதிக்கும் பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும், வரும் ஏப்ரல் மாதம் விருதுகள் வழங்கப்படவுள்ளன.
விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
பத்ம விருதுக்கு தேர்வான முக்கிய நபர்கள்
பத்ம விபூஷண் எல். சுப்ரமணியம் இசை கர்நாடகா எம்.டி.வாசுதேவன் நாயர்(மறைவுக்கு பின்) எழுத்தாளர் கேரளா ஒசாமா சுசூகி(மறைவுக்கு பின்) தொழில் ஜப்பான்பத்ம பூஷண்சூர்ய பிரகாஷ் ஊடகம் கர்நாடகாஅனந்த் நாக் நடிகர் கர்நாடகாஜோஸ் சாக்கோ பெரியபுரம் மருத்துவம் கேரளா நல்லி குப்புசாமி தொழில் தமிழகம். பாலகிருஷ்ணா சினிமா ஆந்திரா, ஸ்ரீஜேஷ் விளையாட்டு கேரளா. அஜித் குமார் சினிமா தமிழகம். ஷோபனா சந்திரகுமார் கலை தமிழகம். ராம்பகதுார் ராய் ஊடகம் உ.பி.,
பத்மஸ்ரீடாக்டர் ஆர்.லட்சுமிபதி ஊடகம், கலை, கல்வி தமிழகம்குருவாயூர் துரை இசை தமிழகம்ஹூக் மற்றும் கேன்ட்சர்(மறைவுக்கு பின்) எழுத்தாளர் உத்தரகண்ட்ஐ.எம். விஜயன் விளையாட்டு கேரளா. செப் தாமு சமையல் கலை தமிழகம், எம்.டி.ஸ்ரீநிவாஸ் அறிவியல் மற்றும் பொறியியல் தமிழகம், தட்சிணாமூர்த்தி இசை புதுச்சேரி, புரிசை.கே.சம்பந்தன் கூத்து கலைஞர் தமிழகம், அஸ்வின் விளையாட்டு தமிழகம். சந்திரமோகன் தொழில் தமிழகம்ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி சிற்ப கலை தமிழகம்சீனி விஸ்வநாதன் இலக்கியம் தமிழகம்வேலு ஆசான் இசை தமிழகம்