நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடிகைகளை ஆபாசமாக சித்திரித்து வெளியிடப்படும் காணொளிகள், புகைப்படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், ராஷ்மிகாவைத் தொடர்ந்து இந்தி நடிகை கத்ரீனா கைஃபும் இத்தகைய தொல்லையை எதிர்கொண்டுள்ளார். அவரது ஆபாச புகைப்படம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

‘டைகர் 3’ என்ற புதுப்படத்தில் துண்டு மட்டும் அணிந்து குளியலறை சண்டைக் காட்சியில் நடித்துள்ளார் கத்ரீனா.

அந்தக் காட்சியை ஆபாசமாக சித்திரித்து யாரோ சிலர் இணையத்தில் காணொளி வெளியிட்டுள்ளனர்.

இதனால் கத்ரீனா மிகுந்த வேதனையில் உள்ளார் என்றும் அக்குறிப்பிட்ட ஆபாசக் காணொளியை யாரும் பிறருடன் பகிர வேண்டாம் என்றும் ‘டைகர் 3’ படக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதற்கிடையே, இதுபோன்ற ஆபாச காணொளிகளை வெளியிட்டால் மூன்று ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என இந்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

“இதுபோன்ற தருணங்களில் இளம் நடிகைகள் நம்பிக்கை இழந்துவிடக்கூடாது. நீதி பெறுவதற்குப் போராட வேண்டும்,” என மூத்த நடிகைகள் வலியுறுத்தி உள்ளனர்.

கத்ரினாவுக்கு இந்தித் திரையுலகத்தினர் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons