பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருவதையொட்டு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. மேலும், கடைகளை மூட சென்னை காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான மத்திய அரசின் திட்டங்களைசென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரதமர் மோடி இன்று தொடக்கி வைக்கிறார்.

சென்னை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஹைதராபாதில் இருந்து சென்னை விமான நிலையம் வரும் பிரதமர் மோடி, ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் அடையாறு தளத்துக்குச் செல்கிறார். அங்கிருந்து சாலை வழியாக நேரு விளையாட்டு அரங்கத்துக்கு மாலை 5.45 மணியளவில் வருகிறார். அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில், நிறைவடைந்த 5 திட்டங்களை அவர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

இந்நிலையில், சென்னையில் 22,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா். பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவால் தலைமையில் செய்யப்பட்டுள்ளன. 5 கூடுதல் காவல் ஆணையா்கள் , 8 இணை ஆணையா்கள், 29 துணை ஆணையா்கள், 80 உதவி ஆணையா்களும் ஈடுபடுகின்றனா். பிரதமா் மோடி காா் செல்லும் சாலையில் ஐந்தடிக்கு ஒரு காவலா் பாதுகாப்புப் பணிக்காக நிறுத்தப்படுகிறாா். அரை மணி நேரத்துக்கு ஒரு முறை வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா், பிரதமா் செல்லும் சாலையை சோதனையிடுகின்றனா்.

பாதுகாப்பு கருதி பிரதமரின் நிகழ்ச்சி நடைபெறும் நேரு உள் விளையாட்டரங்கம், பெரியமேடு ஆகிய பகுதிகளில் பிரதமா் மோடி வரும் நேரத்தில் இருந்து நிகழ்ச்சியில் பங்கேற்று விமான நிலையத்துக்குச் சென்றடையும் வரை கடைகளை மூட சென்னை காவல்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா்.

இதேபோல, நிகழ்வு முடிந்து சாலை வழியாக விமான நிலையத்திற்கு பிரதமா் செல்வதால், காா் செல்லும் சாலைகளிலும் கடைகளை மூடுமாறு வியாபாரிகளுக்கு போலீஸாா் அறிவுறுத்தியுள்ளனா்.

இதில் வியாழக்கிழமை மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை பெரியமேடு பகுதியில் உள்ள சாலைகள், ஈ.வெ.ரா. சாலை, ஜிஎஸ்டி சாலை, அண்ணா சாலை உள்ளிட்ட சாலைகளை வாகன ஓட்டிகள் தவிா்க்கும்படியும், குறிப்பிட நேரத்தில் வாகனங்கள் மெதுவாகவே செல்ல முடியும் என்பதால் மாற்று சாலைகளை பயன்படுத்தும்படியும் பெருநகர காவல்துறையின் போக்குவரத்து பிரிவு வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும், இரவு நிகழ்வு முடிந்த பிறகு நேரு விளையாட்டு அரங்கிலிருந்து விமான நிலையம் செல்லும் சாலைகள் அனைத்து பிரதமர் கார் செல்வதற்காக பிற வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படவுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons