கரூர் மாவட்டம் புகழிமலையில் உள்ள பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் திருக்கல்யாண வைபவ விழாவை முன்னிட்டு பாலசுப்ரமணிய சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனை தொடர்ந்து திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து அருள் பெற்றனர்.
இதேபோல் திருக்கல்யாணம் வைபவத்தை முன்னிட்டு நன்செய் புகளூர் அக்ரஹாரத்தில் உள்ள சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
மேலும் பாலமலை பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு சாமிக்கு பல்வேறு வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
அனைத்து முருகன் கோவில்களிலும் திருக்கல்யாண வைபவம் நடந்தது குறிப்பிடத் தக்கது.