தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரெயில்களை இயக்குவது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

மதுரையில் இருந்து பழனிக்கு வரும் நவம்பர் 11-ந் தேதியில் இருந்து காலை 7.20 மணிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும். அதே போல் பழனியில் இருந்து மதுரைக்கு நவம்பர் 10-ந் தேதியில் இருந்து மாலை 4.45 மணிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும்.

கோவையில் இருந்து பழனிக்கு வரும் நவம்பர் 10-ந் தேதியில் இருந்து மதியம் 2.10 மணிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும். அதே போல் பழனியில் இருந்து கோவைக்கு நவமபர் 11-ந் தேதியில் இருந்து காலை 11.15 மணிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும்.

விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறைக்கு வரும் நவம்பர் 10-ந் தேதியில் இருந்து காலை 6 மணிக்கு ஒரு சிறப்பு ரெயிலும், மறுமார்க்கத்தில் மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரத்திற்கு நவம்பர் 10-ந் தேதியில் இருந்து மாலை 6 மணிக்கு ஒரு சிறப்பு ரெயிலும் இயக்கப்படும்.

திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடிக்கு வரும் நவம்பர் 8-ந் தேதியில் இருந்து காலை 7.35 மணிக்கு ஒரு சிறப்பு ரெயிலும், மறுமார்க்கத்தில் தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலிக்கு நவம்பர் 10-ந் தேதியில் இருந்து மாலை 6 மணிக்கு ஒரு சிறப்பு ரெயிலும் இயக்கப்படும்.

திருநெல்வேலியில் இருந்து செங்கோட்டைக்கு வரும் நவம்பர் 10-ந் தேதியில் இருந்து காலை 7 மணிக்கு ஒரு சிறப்பு ரெயிலும், மறுமார்க்கத்தில் செங்கோட்டையில் இருந்து திருநெல்வேலிக்கு நவம்பர் 10-ந் தேதியில் இருந்து மாலை 5.50 மணிக்கு ஒரு சிறப்பு ரெயிலும் இயக்கப்படும்.

திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு வரும் நவம்பர் 10-ந் தேதியில் இருந்து காலை 7.20 மணிக்கு ஒரு சிறப்பு ரெயிலும், மறுமார்க்கத்தில் திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலிக்கு நவம்பர் 10-ந் தேதியில் இருந்து மாலை 6.05 மணிக்கு ஒரு சிறப்பு ரெயிலும் இயக்கப்படும்.

மேற்கண்ட சிறப்பு ரெயில்கள் அனைத்தும் அனைத்து நாட்களிலும் குறிப்பிட்ட நேரங்களில் இயக்கப்படும் என்றும், இடையில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் நின்று செல்லும் என்றும் ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதே போல் விருதுநகரில் இருந்து காரைக்குடிக்கு வரும் நவம்பர் 10-ந் தேதியில் இருந்து, ஞாயிற்றுக்கிழமைகள் தவிர மற்ற அனைத்து நாட்களிலும், காலை 6.20 மணிக்கு ஒரு சிறப்பு ரெயிலும், மறுமார்க்கத்தில் காரைக்குடியில் இருந்து விருதுநகருக்கு நவம்பர் 10-ந் தேதியில் இருந்து சனிக்கிழமைகள் தவிர மற்ற அனைத்து நாட்களிலும் மாலை 6 மணிக்கு ஒரு சிறப்பு ரெயிலும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons