முதலமைச்சருக்கு பிஆர்.பாண்டியன் வேண்டுகோள்

 

பொங்கல் பரிசு திட்டத்தை சிறப்பு செயலாக்க திட்ட அமைச்சர் உதயநிதி தலைமையில் விரைந்து செயல்படுத்துங்கள் கைவிடாதீர் முதலமைச்சருக்கு பிஆர்.பாண்டியன் வேண்டுகோள்…

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை ஏற்றத்தாழ்வு இல்லாமல் அனைவரும் சிறப்பாக ஒற்றுமையோடு கொண்டாடும் உயரிய நோக்கோடு கொண்டுவரப்பட்ட பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்.
குறிப்பாக இத்திட்டம் மூலம் ஏழை பணக்காரன் என்கிற வேறுபாடு இல்லாமல் அனைவரும் ஒற்றுமையோடு கொண்டாட வேண்டும் என்கிற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாகும்.

இத்திட்டத்தை நம்பி கரும்பு, வாழை,மஞ்சள் உள்ளிட்ட பயிர்கள் ஏராளமாக விவசாயிகள் பயிரிட்டு காத்துள்ளனர். தற்போது பொங்கல் பரிசுத் திட்டத்தை கைவிட்டு குடும்ப அட்டைக்கு ஆயிரம் ரூபாய் தமிழக அரசு வழங்க போவதாக ஆதாரமற்ற செய்தி உலா வந்து கொண்டிருப்பதால்,விவசாயிகள் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளார்கள்.

இத்திட்டத்தில் முறைகேடுகள் நடைபெற்றால் அதனை தடுத்து மக்கள் பயன்பாட்டினை கருத்தில் கொண்டு விவசாயிகள் நலனை முன்னிறுத்தி தற்போது புதிதாக பொறுப்பேற்று இருக்கிற சிறப்பு செயலாக்க திட்ட அமைச்சர் உதயநிதி  துறையின் கீழ் கூட்டுறவு, வேளாண்,உணவு துறைகளை ஒருங்கிணைத்து விரைந்து செயல்படுத்திட முன்வர வேண்டும்.தமிழகத்தில் விவசாயிகள் உற்பத்தியை செய்யும் பொருட்களை மட்டுமே கொள்முதல் செய்வதை நோக்கமாகக் கொண்டு செயல்படுத்த வேண்டும்.இது குறித்து நாளை நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்தில்  உரிய முடிவெடுத்து பொங்கல் பரிசுத் திட்டத்தை கைவிடாமல் செயல்படுத்த முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் தொழிற் பூங்கா அமைப்பதற்கு நிலங்கள் கையகப்படுத்துவதை எதிர்த்து விவசாயிகள் போராடி வருகிறார்கள். இந்நிலையில் விவசாயிகள் ஒப்புதல் இல்லாமல் விளைநிலங்களை கையகப்படுத்த மாட்டோம் என்று தமிழக அரசு அறிவித்து இருப்பதை வரவேற்கிறோம் அதே நேரம் பவானி ஆற்று நீரை எடுத்தும், நிலத்தடி நீரை பயன்படுத்தியும் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டால் ஒட்டுமொத்தாகமாக அந்த பகுதியில் பயிரிடக்கூடிய தோட்டக்கலைப் பயிர்கள் முப்போகம் விளையக்கூடிய விளைநிலங்கள் அடியோடு அழிந்து போகும். எனவே வேறு தரிசு இடங்களை கண்டறிந்து அங்கு தொழில்பேட்டை அமைக்க முன்வர வேண்டும். இது குறித்து வெளிப்படையாக தமிழக அரசு வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும்.

அறநிலையத்துறை நீதிமன்ற உத்தரவு என்கிற பெயரால் தமிழக முழுமையிலும் குத்தகை பாக்கி என்கிற பெயரில் விவசாயிகளை விளைநிலங்களை விட்டு வெளியேற்றுவதும்,குத்தகைப்பதிவை ரத்து செய்வதும், குடியிருப்பு மனை வாடகை பக்கிய என்கிற பெயரில் வெளியேற்ற நினைப்பதும், கோவில் சொத்துக்களை அபகரிப்பதாக கூறி வழக்கு பதிவு செய்வதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. எனவே அமைச்சரவை கூட்டத்தில் உரிய கொள்கை முடிவு எடுத்து குறைந்தபட்ச வாடகை நிர்ணயம் செய்வதோடு, குத்தகை விவசாயிகளுக்கு குத்தகை பதிவை மறு பதிவு வகைப்பாடு செய்து உறுதிப்படுத்திட உரிய கொள்கை முடிவு எடுக்க வேண்டும். அதனை நீதிமன்றம் மூலம் முடிவுக்கு கொண்டு வருவதற்கு தமிழக முதலமைச்சர் முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன்

கனிமவளத் துறை மூலம் மணல் விற்பனை நடைபெறுகிறது. இதன் மூலம் வரும் நிதி முழுமையும் நீர் பசன கட்டமைப்புகளை மேம்பாடு செய்வதற்கு  முன்வர வேண்டும்.

நபார்டு திட்டம் மற்றும் மணல் விற்பனை மூலம் வரும் நிதிகளை சாலை போடுவதற்கும், மாற்றுத்திட்டங்களுக்கும் பயன்படுத்துவதை தமிழக முதலமைச்சர் அனுமதிக்க கூடாது என்றார்

சென்னை மண்டல செயலாளர் சைதை ப.சிவா உடன் இருந்தார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க

WhatsApp & Call Buttons