- சென்னை,
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல் பண்டிகையை கொண்டாட பெரும்பாலானோர் சென்னையில் இருந்து தங்களின் சொந்த ஊர்களுக்கு ரெயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்வார்கள். பயணிகளின் வசதிக்காகவும், கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கவும் ரெயில் டிக்கெட் முன்பதிவு முன்பே தொடங்கும். அடுத்த ஆண்டு ஜனவரி 13-ந்தேதி (திங்கட்கிழமை) போகி பண்டிகை, 14-ந்தேதி பொங்கல் பண்டிகை (செவ்வாய்க்கிழமை), 15-ந்தேதி மாட்டுப் பொங்கல் (புதன்கிழமை), 16-ந்தேதி (வியாழக்கிழமை) காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு செல்வோர் வசதிக்காக, ரெயில் டிக்கெட் முன்பதிவு நாளை முதல் தொடங்குகிறது.
அந்த வகையில், ஜனவரி 10-ந்தேதி பயணம் செய்ய விரும்புவோர் நாளையும், ஜனவரி 11-ந் தேதிக்கு பயணம் செய்ய 13-ந்தேதியிலும், ஜனவரி 12-ந்தேதிக்கு வரும் 14-ந்தேதியும் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்யலாம். ஜனவரி 13-ந்தேதி போகி பண்டிகை அன்று பயணம் செய்ய விரும்பும் பயணிகள் வரும் 15-ந்தேதியும் முன்பதிவு செய்து பயணம் செய்யலாம்.ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் வாயிலாகவும், டிக்கெட் முன்பதிவு மையங்களிலும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெற்கு ரெயில்வே தகவல் தெரிவித்துள்ளது.
The short URL of the present article is: https://reportertoday.in/8q27