தமிழகத்தில் உள்ள அரசு பேருந்துகளிலும் பயணம் மேற்கொள்ளும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பேணிக் பட்டன் என்ற அபாய பொத்தானை அறிமுகப்படுத்தி உள்ளது தமிழக அரசு.

டெல்லியில் கடந்த 2013ஆம் ஆண்டு பேருந்து ஒன்றில் , இளம்பெண் ஒருவர் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்தியில்அப்போது ஆண்ட காங்கிரஸ் அரசு நிர்பயா என்ற நிதியை உருவாக்கி உருவாக்கி பெண்களின் பாதுகாப்பிற்காக இந்த நிதி செலவிடப்படும் என அறிவித்தது. இந்த நிதியானது மத்திய அரசால் தற்போதும் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிதியைக் கொண்டு தமிழகத்தில் ஆட்சி பொறுப்பிற்கு வந்துள்ள திமுக அரசு, முதற்கட்டமாக பெண்கள் அதிகம் பயணம் செய்யும் வழித்தடங்களை கண்டறியும் பணியை மேற்கொண்டது. இந்த வழித்தடங்களில் முதற்கட்டமாக, சென்னை மாநகர பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றை சென்னை மாநகர போக்குவரத்து கழக தலைமையகத்தில் இருந்து கண்காணித்து வருகின்றனர்.

இப்பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களிடம் யாராவது சில்மிஷம் செய்தால், உடனே பெண்கள் அந்த பேருந்துகளில் அமைக்கப்பட்டுள்ள பேணிக் பட்டன் என்ற அபாய பொத்தானை அமுக்கினால் போதும். உடனே மாநகர பேருந்து தலைமையகத்தில் இருந்து அப்பேருந்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா மூலம் அங்கு நடப்பவற்றை ஆராய்வர். அத்தோடு மட்டும் இல்லாமல், பேருந்து செல்லும் வழித்தடத்தில் உள்ள காவல்நிலையத்திற்கு அவசர உதவி எண் 100 மூலம் தகவல் கொடுப்பர். இதனையடுத்தது சம்பவ இடத்திற்கு போலீசார் உடனடியாக நேரில் சென்று புகார் கூறிய பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வர். இந்த திட்டத்திற்காக 500 மாநகர பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதுதவிர சென்னை மாநகரத்தில் ஓடும் 2800 அரசு பேருந்துகளிலும் விரிவுப்படுத்த போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது. மேலும் இத்திட்டமானது தமிழகம் முழுவதும் விரிவுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெண் பயணிகளிடம் கருத்து கேட்டபோது, இத்திட்டம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. அதேநேரத்தில் இந்த சிசிடிவி கேமராக்களை பொருத்துவது மட்டும் போதாது. அவைகள் ஒழுங்காக செயல்படுகின்றனவா ? என அதிகாரிகள் அடிக்கடி கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏற்கனவே பெண் பயணிகளுக்கு டவுண் பஸ்களில் இலவச பயணம் என அறிவித்துள்ள அரசு, இதுபோல் பெண்களின் நலன் பாதுகாக்கும் திட்டங்களை அதிகம் கொண்டு வர வேண்டும் என்பது பெண்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons