பயனர்களின் தரவுகளை பாதுகாக்க தவறியதால் ரூ.1,100 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்று கலிபோர்னியாவில் உள்ள கூட்டாட்சி நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் 229 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ள சமூக வலைதளம் “ட்விட்டர்”.மே 2013 முதல் செப்டம்பர் 2019 வரை, ட்விட்டர் நிறுவனம் பயனர்களிடம் கணக்குப் பாதுகாப்பிற்காக அவர்களின் தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளைச் சேகரித்து வந்துள்ளது. ஆனால் பயனர் தரவுகளை விளம்பர நிறுவனங்களுக்கு பகிர்ந்து குறிப்பிட்ட பயனர்களுக்கு ஆன்லைன் விளம்பரங்களை அனுப்ப ட்விட்டர் உதவியதாக புகார் எழுந்தது.

“இந்த நடைமுறை 140 மில்லியனுக்கும் அதிகமான ட்விட்டர் பயனர்களைப் பாதித்தது. அதே நேரத்தில் ட்விட்டரின் முதன்மையான வருவாயை அதிகரிக்கிறது.” என்று கலிபோர்னியாவில் உள்ள ஒரு கூட்டாட்சி நீதிமன்றத்தில் ஃபெடரல் டிரேட் கமிஷன் தலைவர் லினா கான் தெரிவித்தார். “பயனர்களின் தரவுகளை பாதுகாப்பாக வைத்திருப்பது மற்றும் தனியுரிமைக்கு மதிப்பளிப்பது இரண்டையும் நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். மேலும் நாங்கள் ஃபெடரல் டிரேட் கமிஷன் உடன் ஒவ்வொரு நடவடிக்கையிலும் ஒத்துழைத்துள்ளோம்” என்று ட்விட்டரின் தலைமை தனியுரிமை அதிகாரி டேமியன் கீரன் தெரிவித்தார்.

இந்த புகாரில் 150 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதம் (இந்திய மதிப்பில் ரூ.1,100 கோடி) செலுத்த வேண்டும் என்றும் பயனர் தரவுகளை பாதுகாக்க புதிய இணக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் ஃபெடரல் டிரேட் கமிஷன் தெரிவித்துள்ளது. ஃபெடரல் டிரேட் கமிஷனின் இந்த கோரிக்கை கலிபோர்னியாவில் உள்ள ஒரு கூட்டாட்சி நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும். அவ்வாறு அங்கீகரிக்கப்பட்டால் அபராதமாக ரூ.1,100 கோடியை ட்விட்டர் நிறுவனம் செலுத்த வேண்டி இருக்கும்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons