நாட்டின் முதல் நமோ பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி உத்தர பிரதேசத்தில் இன்று தொடங்கிவைத்தார்.
தில்லி – காஜியாபாத் – மீரட்டுக்கு இடையேயான 17 கி.மீ. தொலைவு வழித்தடத்தில் ஷாஹிபாபாத், காஜியாபாத், குல்தாா், துஹாய், துஹாய் டிபோட் ஆகிய ரயில் நிலையங்கள் உள்ளன. உலகத் தரத்தில் கட்டப்பட்டுள்ள இந்த ரயில் நிலையங்களில் 15 நிமிஷங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும்.
அதிகபட்சமாக 180 கி.மீ. வேகத்தில் செல்லும் வகையில் இந்த ரயில்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. பயணிகளின் வருகைக்கு ஏற்ப 5 நிமிஷ இடைவெளியில் ஒரு ரயிலை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக ரூ.30,000 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தை பானிபட் வரையில் நீட்டிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில் தில்லி – காஜியாபாத் – மீரட்டுக்கு இடையேயான நாட்டின் முதல் நமோ பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி உத்தர பிரதேசத்தில் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து ரயிலில் பயணம் செய்த பிரதமர் மோடி, தன்னுடன் பயணித்த ரயில் பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவியரிடம் உரையாடினார்.
இந்நிகழ்வின்போது உத்தர பிரதேச முதல் யோகி ஆதித்யநாத் உடனிருந்தார்.