திருவண்ணாமலையில் கிரிவலம் பாதையை ஒட்டிய தனியாருக்குச் சொந்தமான இடத்தில், அமைச்சர் எ.வ.வேலு நிறுவிய தனியார் அறக்கட்டளையால் நிறுவப்படும் கருணாநிதி சிலைக்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், நீதிபதி முகமது ஷபிக் அடங்கிய அமர்வு, நிலம் தனியாருக்குச் சொந்தமாக இருக்கும் பட்சத்தில், மனுவை எப்படி விசாரிக்க முடியும் என்கிற கேள்வியை முன்வைத்தது.

சிலை அமைக்கும் நிலம் தனியார் பட்டா இடம் என்பதற்கான ஆவணத்தை மாவட்ட நிர்வாகம் சமர்ப்பித்ததை தொடர்ந்து, நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்தனர்.

மே 19 அன்று இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த உயர் நீதிமன்றம், சிலை அமைப்பது ஆக்கிரமிப்பு இடம் என்கிற மனுதாரரின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, அது தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க உத்தரவிட்டது. மேலும், அந்த இடத்தில் சிலை அமைக்க இடைக்காலத் தடை விதித்தும் உத்தரவிட்டிருந்தது.

சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த ஜி. கார்த்திக் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். அவர், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து ஆக்கிரமிப்பு நிலத்தில் சிலை அமைக்கப்பட உள்ளது என குற்றச்சாட்டியிருந்தார்.

அதற்கு பதிலளித்த தமிழக அரசு, குறிப்பிட்ட அந்த நிலம் பட்டா நிலம் எனவும், அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்தவர் யார் என்ற விவரங்களை கூறாத நிலையில், வேளச்சேரியைச் சேர்ந்த மனுதாரர் எந்த விவரங்களையும் தெரிவிக்காமல் இந்த வழக்கை தொடர்ந்துள்ளதால், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என வாதிடப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons