119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் வரும் 30-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.

இந்நிலையில், செகந்திராபாத்தில் பாஜக ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் இளம்பெண் ஒருவர் ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் திடீரென டவர் மீது வேகமாக ஏறினார். இதையடுத்து, அந்த இளம் பெண்ணை பிரதமர் சமாதானப்படுத்திய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.பிரதமர் மோடி பேசிக்கொண்டிருந்தபோது இளம்பெண் ஒருவர், அங்கிருந்த மின்விளக்கு டவரின் மீது ஏறி பிரதமரிடம் பேச முயன்றார். இளம்பெண் டவர்மீது ஏறுவதைக் கண்ட பிரதமர் மோடி, தயவுசெய்து கீழே இறங்குங்கள் என பதைபதைப்புடன் கேட்டுக் கொண்டார். உங்களிடம் நான் பேசுகிறேன் என பிரதமர் கூறியதை அடுத்து, அப்பெண் டவரில் இருந்து கீழே இறங்கினார். இதனால் பொதுக்கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, தெலங்கானா மாநிலம் உதயமானதும் முதல் முதலமைச்சர் தலித் எனக்கூறிய கேசிஆர், பிறகு அந்த நாற்காலியை தானே பிடுங்கிக் கொண்டார். சுதந்திரத்திற்கு பிறகு அத்தனை அரசியல் கட்சிகளும் மடிகா சமூக மக்களை மோசம் செய்தன. தலித்களுக்கு 3 ஏக்கர் நிலம் கொடுப்பதாக சொன்ன பிஆர்எஸ் கட்சி அதை நிறைவேற்றவில்லை, அம்பேத்கரை தோற்கடித்த கட்சி காங்கிரஸ். காங்கிரஸ் கட்சியால்தான் அம்பேத்கருக்கு பாரத ரத்னா வழங்கப்படாமல் போனதாகவும் குற்றம் சாட்டினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons