தமிழகத்தில் காலநிலை மாற்றத்தால் வேளாண்மையில் கடந்த சில ஆண்டுகளாக மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. பருவம் மாறி மழை பெய்வதால் முதலில் விவசாயம் பாதிக்கப்படுகிறது. எனவே பருவ நிலைக்கு ஏற்ப சாகுபடி பருவங்களில் மாற்றம் கொண்டுவர வேண்டிய தேவையும் அவசியமும் ஏற்பட்டிருக்கிறது.

தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே வெள்ளப்பெருக்கு ஏற்படும் வகையில் கோடை மழை பெய்தது ஒருபக்கம் மகிழ்ச்சி தருவதாக இருந்தாலும், மறுபுறம் அச்சத்தோடு அணுகவேண்டிய நிலை உள்ளது.குறிப்பாக கர்நாடகாவில் மைசூர், மாண்டியா போன்ற காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெரும் மழை பெய்வதால் மேட்டூர் அணை நிரம்பி இருக்கிறது.இதனை கொண்டு உடனடியாக குறுவை சாகுபடி துவங்கிட வேண்டும். காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும் என்கிற பழமொழியை முன்னுதாரணமாக கொண்டு தமிழக அரசு மே 24ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என்று அறிவிப்பு விவசாயிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் வரவேற்கிறோம், பாராட்டுகிறோம்.

5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடியை மேற்கொள்ள முடியும் என்கிற நம்பிக்கை வந்திருக்கிறது. உடனடியாக வேளாண்துறை கூட்டுறவுத்துறை நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் அமைச்சர்கள் விவசாயிகள் கொண்ட முத்தரப்பு கூட்டம் நடத்தி சாகுபடி பணியை துரிதப்படுத்துவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும். அறுவடை காலத்தில் தடையின்றி நிபந்தனையின்றி கொள்முதல் செய்வதை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை வாழைத்தண்டு வாழை இலை,பட்டைகளையும் கொண்டு பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் யூரியாவுக்கு மாற்றான பயிர் ஊக்கிகளையும் ஆய்வுசெய்து கண்டுபிடித்துள்ளார். இவரது கண்டுபிடிப்புகள் நடைமுறைப்படுத்துவதற்கு உரிய ஆக்கத்தையும் ஊக்கத்தையும் தமிழக அரசு கொடுக்க முன்வரவேண்டும்.

பருவநிலை மாற்றத்தால் மண மலட்டுத்தன்மை அடைந்ததையும் மாற்றுகின்ற எதிர்கொள்கிற நிலையில் பாரம்பரிய விவசாயத்திற்கு நம்மாழ்வார் பெயரில் வேளாண் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையம் தொடங்கியிருப்பதை வரவேற்கிறோம். தொலைநோக்குப் பார்வையோடு ரசாயன உரங்கள் குறைக்கப்பட்டு இயற்கை உரங்கள் பயன்பாட்டிற்கு கால்நடை வளர்ப்பை அடிப்படையாக மேம்படுத்த ஊக்கப்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்.

பாரம்பரிய விவசாயத்தை ஊக்கப்படுத்திடவும், உரிய சந்தை,விலை, ஏற்றுமதி,இறக்குமதி உள்ளிட்ட தொழில் நுட்ப கருத்துக்களை பரிமாறிக் கொள்கிற வகையில் வருகிற ஜூன் 3,4,5 தேதிகளில் சென்னை காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வளாகத்தில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் அக்ரி எக்ஸ்போ 2022 நடைபெற உள்ளது பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தமிழகம் முழுமையும் இருந்து பங்கேற்கிறார்கள் என்றார்.

சென்னை மண்டல செயலாளர்
சைதை ப. சிவா,தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் செந்தில்குமார், திருவாரூர் மாவட்ட துணை செயலாளர் முகேஷ்உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons