தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சபரிமலை விழாக்காலத்தை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து, மராட்டிய மாநிலம் பன்வெலுக்கு சபரி சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
அதன்படி, நாகர்கோவில் சந்திப்பு – பன்வெல் (வண்டி எண்: 06075) சிறப்பு கட்டண ரெயில் செவ்வாய்க்கிழமைகளான வருகிற 28-ந்தேதி, டிசம்பர் 5, 12, 19, 26-ந்தேதிகள், ஜனவரி 2, 9, 16-ந்தேதிகளில் காலை 11.40 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் இரவு 10.20 மணிக்கு பன்வெல் ரெயில் நிலையத்தை வந்து அடையும்.
இதேபோன்று மறுமார்க்கத்தில், பன்வெல் – நாகர்கோவில் சந்திப்பு (06076) சிறப்பு கட்டண ரெயில் புதன்கிழமைகளான வருகிற 29-ந்தேதி, டிசம்பர் 6, 13, 20, 27-ந்தேதிகள், 2024-ம் ஆண்டு ஜனவரி 3, 10, 17-ந்தேதிகளில் பன்வெல் ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு அடுத்த வெள்ளிக்கிழமைகளில் காலை 10 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தை சென்றடையும். இந்த ரெயில்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.