கனமழை காரணமாக தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கனமழை காரணமாக தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், நெல்லை, மயிலாடுதுறை, விருதுநகர் ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவிட்டுள்ளது.

அதேசமயம் விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தவரை கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons