இந்து சமய அறநிலை துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருக்கோவில்களில் ஆய்வு செய்வதற்காக வருகை தந்தார்.அப்போது, புகழ்பெற்ற அண்ணாமலையார் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
மூன்று ஆண்டு காலமாக பயன்பாட்டில் இல்லாமல் இருந்த தங்கத்தேரினை அமைச்சர் வடம் பிடித்து இழுத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். இதற்கு முன்னதாக சிறப்பு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைத்திருந்த அம்பாளை தோளில் சுமந்தவாறு அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டவர்கள் திருக்கோவிலில் வலம் வந்தார்.