தமிழகத்தில் இதுவரை தடுப்பூசி போடாதவர்களுக்கு வரும் 8ம் தேதி, லட்சம் இடங்களில் சூப்பர் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று பொது சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 2 வருடமாக பீடித்து கொண்டிருந்த கொரோனாவைரஸ் தொற்று மெல்ல மெல்ல குறைந்து வருகிறது.

இதற்கு ஒரே காரணம் மத்திய அரசு மேற்கொண்ட அனைத்துவிதமான நடவடிக்கைகள்தான்.. அந்த வகையில், நேற்றைய நிலவரப்படி, தமிழகத்தில் ஆண்கள் 25, பெண்கள் 33 என மொத்தம் 58 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்..

அதிகபட்சமாக சென்னையில் 28 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 54,153 ஆக அதிகரித்துள்ளது.. இதுவரை 34 லட்சத்து 15,662 பேர் குணமடைந்துள்ளனர்… நேற்று மட்டும் 59 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர்… தமிழகம் முழுவதும் 466 பேர் இன்னமும் சிகிச்சையில் உள்ளனர்… நேற்றுகூட உயிரிழப்பு ஏதும் இல்லை…

அதேசமயம், 4ம் அலை பரவாமல் தடுக்கும் வகையில், தடுப்பூசி போடும் பணியை தமிழக அரசு தீவிரப்படுத்தி உள்ளது… அதன்படி வரும் 8ம் தேதி சூப்பர் மெகா தடுப்பூசி முகாம் ஒரு லட்சம் இடங்களில் நடைபெற உள்ளது.. அதாவது, 2-வது டோஸ் செலுத்தாதவர்களுக்கு முக்கியதுவம் தரும் வகையில் இந்த சூப்பர் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது.. இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் சொன்னதாவது:

தமிழகத்தில் 1.50 கோடி பேர் 2ம் தவணை தடுப்பூசி போடாமல் உள்ளனர். இதனால், கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து தடுப்பூசி போடும் வகையில், கிராம வாரியாக பட்டியல் தயாரிக்கப்பட்டு, பொது சுகாதாரத்துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதில், தடுப்பூசி போடாதவர்களின் பெயர், மொபைல் எண், தடுப்பூசியின் பெயர், முதல் டோஸ் போட்ட நாள், இரண்டாம் டோஸ் போட வேண்டிய நாள், முதல் டோஸ் போட்டு எத்தனை நாட்கள் ஆகியுள்ளன போன்ற விபரங்கள் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை கொண்டு கிராம வாரியாக தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்படும். தேவைப்பட்டால் ஒன்றுக்கு மேற்பட்ட முகாம்கள் அமைக்கப்படும். அனைவருக்கும் முழுமையாக தடுப்பூசி செலுத்தினால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, அடுத்த அலை வருவதில் இருந்து பாதுகாத்து கொள்ள முடியும் என்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *