சினிமா

அரசியல்

ஆரோக்கியம்

மருத்துவம்

 • “சூப்பர் மெகா தடுப்பூசி முகாம்”.. 8ம் தேதி தமிழகம் முழுதும் லட்சம் இடங்களில் நடக்கிறது.அரசு அதிரடி!
  “சூப்பர் மெகா தடுப்பூசி முகாம்”.. 8ம் தேதி தமிழகம் முழுதும் லட்சம் இடங்களில் நடக்கிறது.அரசு அதிரடி!

  தமிழகத்தில் இதுவரை தடுப்பூசி போடாதவர்களுக்கு வரும் 8ம் தேதி, லட்சம் இடங்களில் சூப்பர் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று பொது சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

  தமிழகத்தில் 2 வருடமாக பீடித்து கொண்டிருந்த கொரோனாவைரஸ் தொற்று மெல்ல மெல்ல குறைந்து வருகிறது.

  இதற்கு ஒரே காரணம் மத்திய அரசு மேற்கொண்ட அனைத்துவிதமான நடவடிக்கைகள்தான்.. அந்த வகையில், நேற்றைய நிலவரப்படி, தமிழகத்தில் ஆண்கள் 25, பெண்கள் 33 என மொத்தம் 58 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்..

  அதிகபட்சமாக சென்னையில் 28 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 54,153 ஆக அதிகரித்துள்ளது.. இதுவரை 34 லட்சத்து 15,662 பேர் குணமடைந்துள்ளனர்… நேற்று மட்டும் 59 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர்… தமிழகம் முழுவதும் 466 பேர் இன்னமும் சிகிச்சையில் உள்ளனர்… நேற்றுகூட உயிரிழப்பு ஏதும் இல்லை…

  அதேசமயம், 4ம் அலை பரவாமல் தடுக்கும் வகையில், தடுப்பூசி போடும் பணியை தமிழக அரசு தீவிரப்படுத்தி உள்ளது… அதன்படி வரும் 8ம் தேதி சூப்பர் மெகா தடுப்பூசி முகாம் ஒரு லட்சம் இடங்களில் நடைபெற உள்ளது.. அதாவது, 2-வது டோஸ் செலுத்தாதவர்களுக்கு முக்கியதுவம் தரும் வகையில் இந்த சூப்பர் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது.. இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் சொன்னதாவது:

  தமிழகத்தில் 1.50 கோடி பேர் 2ம் தவணை தடுப்பூசி போடாமல் உள்ளனர். இதனால், கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து தடுப்பூசி போடும் வகையில், கிராம வாரியாக பட்டியல் தயாரிக்கப்பட்டு, பொது சுகாதாரத்துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

  இதில், தடுப்பூசி போடாதவர்களின் பெயர், மொபைல் எண், தடுப்பூசியின் பெயர், முதல் டோஸ் போட்ட நாள், இரண்டாம் டோஸ் போட வேண்டிய நாள், முதல் டோஸ் போட்டு எத்தனை நாட்கள் ஆகியுள்ளன போன்ற விபரங்கள் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை கொண்டு கிராம வாரியாக தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்படும். தேவைப்பட்டால் ஒன்றுக்கு மேற்பட்ட முகாம்கள் அமைக்கப்படும். அனைவருக்கும் முழுமையாக தடுப்பூசி செலுத்தினால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, அடுத்த அலை வருவதில் இருந்து பாதுகாத்து கொள்ள முடியும் என்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

செய்தி

 • தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை: தடைவிதிக்க மறுத்த உயர் நீதிமன்றம்!
  தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை: தடைவிதிக்க மறுத்த உயர் நீதிமன்றம்!

  தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும் சட்ட திருத்தத்துக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை புழல் சிறையில் உதவி சிறை அதிகாரியாக பணிபுரிந்து வரும் ஷாலினி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில், நீலகிரி மாவட்டம் கேரள எல்லையில் உள்ள சேரம்பாடி ஊரைச் சேர்ந்தவர் என்றும், அங்கு 10ஆம் வகுப்பு வரை தமிழ் வழிக்கல்வியில் படித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

  பின்னர் 11 மற்றும் 12ஆம் வகுப்பு தனது ஊரில் மேல்நிலை பள்ளி இல்லாததால் அருகிலுள்ள கேரளாவில் உள்ள பள்ளியில் ஆங்கில வழிக்கல்வியில் படித்ததாக குறிப்பிட்டுள்ளார். பின்னர் குரூப்-2 தேர்வு எழுதி, தமிழ் வழியில் படித்ததிற்கான இட ஒதுக்கீடு அடிப்படையில், சென்னை புழல் சிறையில் உதவி சிறைத் துறை அதிகாரியாக பணிபுரிந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் சிறந்த பணி வாய்ப்பை பெறுவதற்காக கடந்த 2021ஆம் ஆண்டு குரூப் -1 தேர்வு எழுதியதாகவும், அப்போது தமிழ் வழியில் படித்தவர்களுக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் விண்ணப்பிக்க, தமிழக அரசின் புதிய சட்டத்திருத்தத்தின் அடிப்படையில் அனைத்து வகுப்புகளிலும் தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழை கேட்பதாகவும் குறிப்பிட்டுள்ளார் .

  அரசின் இந்த சட்டத்திருத்தம் தனது அடிப்படை உரிமையை பாதிப்பதாக குறிபிட்டுள்ள ஷாலினி, புதிய சட்டத் திருத்தம் செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும், அந்த சட்ட திருத்தத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் டி.ராஜா மற்றும் கே. குமரேஷ்பாபு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, பணிக்கு தகுதி உடைய படிப்பு படிக்கும் வரை, அனைத்து நிலைகளிலும் தமிழ் வழியில் தான் படித்திருக்க வேண்டும், அப்போதுதான் பணியில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க முடியும் என்று தெரிவித்தார். மேலும் ஏற்கனவே இந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்துள்ளதாக சுட்டிக்காட்டினார். தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திருத்திற்கு எதிராக ஷாலினி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

கல்வி

தமிழகம் முழுவதும் பிளஸ்-1 பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது

தமிழகத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வு கடந்த 5ந் தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு 6ந் தேதியும் தொடங்கின. கோடை வெயிலின் தாக்கம் இருந்தாலும் மாணவ- மாணவிகள் உற்சாகமாக தேர்வு எழுதி வருகிறார்கள். தமிழ் மொழிப் பாடத்தேர்வு நடந்து...

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது..!

தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. எனப்படும் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு 2021-22-ம் கல்வி ஆண்டிற்கான அரசு பொதுத்தேர்வுகள் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 30-ந்தேதி வரை நடைபெறுகிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள்,...

தமிழகம் முழுவதும் பிளஸ்- 2 பொதுத்தேர்வு தொடங்கியது!

தமிழகம் முழுவதும் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகின்றது. மொத்தம் 3,119 மையங்களில் நடைபெற்று வரும் இந்தத் தேர்வை 8 லட்சத்து 37 ஆயிரத்து...

10-ம் வகுப்பு வினாத் தாள்கள் ஆந்திராவில் 2-வது நாளாக கசிவு

ஆந்திராவில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தெலுங்கு மற்றும் ஹிந்தி தேர்வுகளின் வினாத் தாள்கள் கசிந்ததால் கல்வித்துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் கடந்த புதன்கிழமை 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது. முதல்...

தமிழக அரசே துணைவேந்தர்களை நியமிக்கும் சட்ட மசோதா நிறைவேற்றம்

பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனத்தை தமிழக அரசே மேற்கொள்ளும் சட்ட மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனத்தை ஆளுநர்...