தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர்
பி ஆர் பாண்டியன் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
மரபணு மாற்று தொழில்நுட்பத்தை 2000 ம்ஆண்டு முதல் தொடர்ந்து இந்தியாவில் எதிர்த்து வருகிறோம். கத்தரிக்காய்க்கு 2006 ஆம் ஆண்டு அனுமதி வழங்கிய போது அன்றைக்கு இருந்த தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் முதலில் ஆதரித்தார்.பின்னர் விவசாயிகளின் கோரிக்கைய ஏற்று எதிராக தீர்மானம் நிறைவேற்றி திரும்ப பெற செய்தார்.திமுக 2021தேர்தல் அறிக்கையில் மரபணு மாற்று தொழில் நுட்பத்தை எதிர்ப்போம் என்று தெரிவித்திருக்கிறார்கள்.
இந்நிலையில் விவசாயிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது 24.07.2024ல் வழக்கில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கி இருந்தாலும், ஒரே கருத்தாக விவசாயிகளிடம் கருத்து கேட்க மத்திய அரசு குழு அமைத்து விசாரணை செய்ய உத்தரவிட்டது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு மரபணு மாற்று தொழில் நுட்பத்தை ஆதரிக்கும் நபர்களைக் கொண்டு குழு அமைத்து அனுமதிப்பதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு மறைமுகமாக ஈடுபடுகிறது.
எனவே தமிழ்நாடு முதலமைச்சர் விரைந்து கடிதம் மூலம் தமிழ்நாடு அரசு கொள்கை பூர்வமாக மரபணு மாற்றம் தொழில்நுட்பத்தை எதிர்ப்பதை தெரிவித்து கைவிட வலியுறுத்த வேண்டும் என நேற்று ஹைத்ராபாத்தில் தென்னிந்திய அளவில் நடைபெற்ற விவசாயிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு 152 கொள்ளளவு உயர்த்திக் கொள்வதற்கும் .பேபி அணை பலப்படுத்துவதற்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அணை குறித்த ஆய்வு செய்வதற்கு இரு குழுக்களை அமைத்து மாதம் ஒருமுறை ஆய்வு செய்து அணை உறுதித்தன்மையை உறுதி செய்து வருகிறது. மத்திய ஜல் சக்தி துறை அமைச்சகம் முல்லைப் பெரியாறு அணை ஆய்வு செய்வதற்கு புதிய குழு அமைத்துள்ளது உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும் இதனை திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
The short URL of the present article is: https://reportertoday.in/8825