சென்னை:வடமேற்கு மற்றும் மத்திய வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்காள விரிகுடாவில் மையம் கொண்டுள்ளது.ஆந்திராவின் கலிங்கப்பட்டினத்திலிருந்து கிழக்கே சுமார் 310 கிமீ தொலைவிலும், 260 கிமீ கிழக்கு-தென்கிழக்கே கோபால்பூர் (ஒடிசா), பாரதீப் (ஒடிசா) க்கு தென்-தென்கிழக்கே 290 கிமீ மற்றும் திகாவிலிருந்து (மேற்கு வங்கம்) 410 கிமீ தெற்கே காற்றழுத்த தாழ்வு மையம் உள்ளது.இது வடமேற்கு திசையில் வடக்கு ஒடிசா-மேற்கு வங்கக் கடற்கரையை நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது.அதன்பிறகு வடக்கு-ஒடிசா-கங்கை மேற்கு வங்காளம் வழியாக மேற்கு-வடமேற்கு நோக்கி நகரும் அதிக வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The short URL of the present article is: https://reportertoday.in/86o6