மத்திய மந்திரி ஆகிறாரா அண்ணாமலை?

 

புதுடெல்லி: பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி 296 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதில் பா.ஜ.க. மட்டும் 240 இடங்களைக் கைப்பற்றியது.ஆனால், மத்திய மந்திரிகள் சிலர் எதிர்பாராத தோல்வியை தழுவி உள்ளனர். ஏற்கனவே மந்திரிகளாக இருந்த எல்.முருகன், ராஜிவ் சந்திரசேகர், ஸ்மிருதி இரானி உள்ளிட்டோர் தோல்வி அடைந்தனர்.இதற்கிடையே, பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா, அமித்ஷா ஆகியோரது அழைப்பின் பேரில் அண்ணாமலை டெல்லி சென்றுள்ளார்.இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த அண்ணாமலைக்கு மத்திய அமைச்சரவையில் இடம் வழங்க ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.புதியவர்களை மந்திரிகளாக நியமிக்க பா.ஜ.க. முடிவு செய்துள்ள நிலையில், அந்தப் பட்டியலில் அண்ணாமலை பெயரும் இடம் பெற்றுள்ளது எனவும், அவருக்கு ஒரு முக்கிய துறை கொடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறதுதமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோருக்கு மாநில தலைவர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க

WhatsApp & Call Buttons