பாரீஸ்,
மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாராஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் உலகம் முழுவதில் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்
பாரா ஒலிம்பிக் தொடரில் ஆண்கள் கிளப் எறிதல் எப். 51 இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இறுதிப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர்கள் தங்கம் , வெள்ளி என 2 பதக்கங்களை வென்றுள்ளனர். இந்திய வீரர் தரம்பிர் 34.92 மீட்டர் தூரம் வீசி முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை வென்றார். மற்றொரு இந்திய வீரர் பிரணவ் சூர்மா 34.59 மீட்டர் தூரம் வீசி 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
தங்கம், வெள்ளி வென்ற தரம்பிர், பிரணவ் சூர்மா ஆகியோருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பாரா ஒலிம்பிக்கில் இந்தியா இதுவரை 5 தங்கம், 9 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கங்களை வென்றுள்ளது.
The short URL of the present article is: https://reportertoday.in/6lo8