தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர்
பி ஆர் பாண்டியன் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

தமிழ்நாட்டில் நீர் ஆதார பிரச்சனைகள் தீவிரம் அடைந்துள்ளது. காவிரியின் குறுக்கே மேகதாட்டு அணைக்கட்ட கர்நாடகா நடவடிக்கை எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். இராசிமணல் அணை கட்டுவது குறித்து அனைத்துக் கட்சிகளும் ஆதரவு கோரினோம். அனைவரும் ஒத்த கருத்தோடு ஏற்றுக் கொண்டுள்ளனர். நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களை சந்தித்து பேசினோம்.திட்டம் சாதகமான ஒன்றுதான் அதனை நிறைவேற்றுவதற்கு முதலமைச்சர் அமெரிக்க பயணம் முடிந்து திரும்பி வந்ததும் கொள்கை முடிவு அறிவிப்பார் என உறுதி அளித்தார்.அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசின் கொள்கை நிலையை முதலமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும்.

காவிரி டெல்டாவில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு 2023 ஆம் ஆண்டு மேட்டூர் அணை ஆகஸ்ட் மாதமே மூடப்பட்டதாலும், வடகிழக்கு பருவமழையும் குறைந்து சாகுபடி பாதிக்கப்பட்டு மகசூல் இழப்பை சந்தித்தனர். பேயரளவிலான இழப்பீட்டை அறிவித்துவிட்டு தலா 5000 ம் கோடி ரூபாயை ஆண்டுதோறும் விவசாயிகள் பேரில் காப்பிட்டு நிறுவனங்கள் கொள்ளை அடிக்கிறார்கள் இந்நிலையில் ஆகஸ்ட் 2ஆம் தேதி காந்தி பிறந்த நாளன்று விவசாயிகள் நீதி கேட்டு சாலை மறியல் போராட்டத்தில் 50 க்கு ம் மேற்பட்ட இடங்களில் ஈடுபடுகிறார்கள்.

கடந்த 2018 காலங்களில் இவ்வாறு போராட்டம் நடத்திய போது  அதிமுக ஆட்சியில் வேளாண்துறை செயலாளர் அழைத்து பேசி மத்திய அரசின் இழப்பீட்டு தொகை குறைவு என எடுத்துரைத்து புதிய பட்டியலை பெற்று விவசாயிகளுக்கு முழுமையான இழப்பீட்டை பெற்றுக் கொடுத்தனர். ஆனால் திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசின் வேளாண் துறை காப்பீட்டு நிறுவனங்களையும், விவசாயிகளையும் அழைத்து பேச மறுப்பது மர்மம் என்ன? என்பது குறித்து விவசாயிகளுக்கு மிகப்பெரிய சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் விளக்கமளிக்க முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 

 

 

 

The short URL of the present article is: https://reportertoday.in/62b3

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க

WhatsApp & Call Buttons