தஞ்சை,

தஞ்சையில் 45 வயது பெண், திருமணமானவர். இவர் தனது மகள் வீட்டிற்கு கடந்த 3ம் தேதி இரவு வருவதற்காக பஸ்சுக்காக காத்திருந்துள்ளார். அப்பொழுது அந்த வழியாக சென்ற பிரவீன் (32), ராஜ்கபூர் (25) இருவரும் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். பஸ்சுக்காக காத்திருந்த 45 வயது பெண்ணிடம் நைசாக பேச்சு கொடுத்தனர். அப்போது பஸ் வர தாமதமாக ஆகும் என கூறி உள்ளனர். தொடர்ந்து தாங்கள் அந்த ஊரை தாண்டித்தான் செல்கிறோம் என போகிற வழியில் இறக்கிவிடுவதாக கூறினர். லிப்ட் கொடுப்பதாக கூறி ஒரு இருசக்கர வாகனத்தில் அப்பெண்ணை அழைத்துக்கொண்டு சென்றுள்ளனர். அவர்களின் பேச்சை கேட்டு அந்த பெண்ணும் சென்றுள்ளார். அவர்களின் பின்னால் ராஜ்கபூர் வந்துள்ளார்.

அப்போது, அந்த பெண் செல்ல வேண்டிய ஊரைத் தாண்டியதும், பிரவீன் மற்றும் ராஜ்கபூர் இருவரும் சேர்ந்து ஆள் நடமாட்டதாக வயல் பகுதிக்கு அப்பெண்ணை வலுக்கட்டாயமாக அழைத்து சென்றுள்ளனர். இதையடுத்து அப்பெண் கூச்சலிட்டுள்ளார். அவரை தாக்கி விட்டு, பிரவீன், ராஜ்கபூர் இருவரும் வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்நிலையில், வீட்டிற்கு வருவதாக கூறி, தனது அம்மா வெகுநேரமாகியும் வரவில்லை என்பதால், 45 வயது பெண்ணின் மகள் தனது தம்பியை விட்டு தேடிவர கூறியுள்ளார். அவர் தேடி வரும் போது வழியில் அம்மா அழுதுக்கொண்டு இருப்பதை பார்த்து மகன் அதிர்ச்சி அடைந்தார்.

அந்த பெண்ணின் மகன் வருவதை பார்த்து பிரவீன், ராஜ்கபூர் இருவரும் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடியுள்ளனர். அவர்களை பிடிக்க முயன்ற போது அவர்கள் இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பி ஓடி விட்டனர். இது குறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, பிரவீன், ராஜ்கபூர் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The short URL of the present article is: https://reportertoday.in/il64

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க

WhatsApp & Call Buttons