புதுடெல்லி,
நாட்டில் உள்ள பல்வேறு ஐகோர்ட்டுகளில் 30 ஆண்டுகளுக்கு மேல் பழமையான சுமார் 62 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. இதில் 1954-ம் ஆண்டில் இருந்து 4 வழக்குகளும், 1955-ம் ஆண்டில் இருந்து 9 வழக்குகளும் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.
அதேபோல் 1952-ம் ஆண்டில் இருந்து 2 வழக்குகள் கொல்கத்தா ஐகோர்ட்டிலும், ஒரு வழக்கு சென்னை ஐகோர்ட்டிலும் நிலுவையில் இருக்கின்றன. சமீபத்தில் நடைபெற்ற மாவட்ட நீதித்துறையின் தேசிய மாநாட்டில் பேசிய ஜனாதிபதி திரவுபதி முர்மு, நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகள் நீதித்துறைக்கு பெரும் சவாலாக உள்ளது என்றும், இதற்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
The short URL of the present article is: https://reportertoday.in/cpq3