பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.இதன்மூலம் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 3 தங்கம், 6 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 18 பதக்கங்களைப் பெற்றுள்ளது. பாரிஸ் பாரா ஒலிம்பிக் தொடரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகள் துளசிமதி முருகேசன், மனிஷா ராமதாஸ் மற்றும் நித்யஸ்ரீ ஆகியோர் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று சாதித்துள்ளனர்.இந்நிலையில் பாரிஸ் நகரில் தமிழக வீராங்கனைகள் உள்ளிட்ட பாரா ஒலிம்பிக் தொடரில் இந்தியா சார்பில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்த வீரர், வீராங்கனைகளை பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பாரிஸ் நகரின் ஈபிள் டவர் முன் அவர்களுடன் நினைவு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
The short URL of the present article is: https://reportertoday.in/gf4d