8-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி சீனாவின் ஹூலுன்பியர் நகரில் நடந்து வருகிறது.இதில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான், மலேசியா, தென் கொரியா ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற 5 அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும். நடப்பு சாம்பியனான இந்தியா தான் மோதிய 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிட்டது.சீனா, ஜப்பான், மலேசியா, தென் கொரியா ஆகிய அணிகளை வீழ்த்திய இந்திய அணி தனது 5-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் இன்று மோதியது. இப்போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் நீடிக்கிறது. பாகிஸ்தான் 2-ம் இடமும் தென்கொரியா 3-ம் இடமும் பிடித்துள்ளது.2016 ஆம் ஆண்டு நடந்த தெற்காசிய விளையாட்டு போட்டியின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியடைந்தது. அதன்பின் கடந்த 8 ஆண்டுகளாக பாகிஸ்தான் அணியிடம் ஒரு போட்டியில் கூட இந்திய அணி தோல்வியடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

The short URL of the present article is: https://reportertoday.in/4p3u

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க

WhatsApp & Call Buttons