மத்திய அரசின் பட்ஜெட் கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமானது பிஆர்.பாண்டியன் எச்சரிக்கை தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி ஆர் பாண்டியன் மன்னார்குடியில் மத்திய அரசின் பட்ஜெட் குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: மத்திய அரசு மோடி தலைமையிலான ஆட்சியின் இரண்டாவது ஆட்சி காலத்தின இறுதி கட்டபட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாகவே பாரதிய ஜனதா கட்சியும்,மத்திய அரசும் மாறி மாறி 2022க்குள் விவசாயிகளுடைய வருவாயை இரட்டிப்பாக்குவோம் என்று உத்திரவாதம் அளித்தது. ஆனால் இன்றைக்கு 2022 முடிந்து 2023 ஆம் ஆண்டு துவக்கத்தில் வரும் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்கிற முன்னோட்டமான இந்த பட்ஜெட்டில் விவசாயிகள் வருவாய் இரட்டிப்பாகுவதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் ஏமாற்றம் அளிக்கிறது. வேளாண் வளர்ச்சிக்கான அனைத்து கொள்கை திட்டங்களும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தயாரித்த மறைமுக அறிக்கையாகவே பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. குறிப்பாக விவசாயிகள் ஓராண்டு காலம் வேளாண் விரோத சட்டங்களுக்கு எதிராகவும் குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டம் கொண்டு வர வலியுறுத்தி போராடி வந்தார்கள். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வாருங்கள் நான் குறைந்தபட்ச ஆதார விலை தருவதோடு, வேளாண் விரோத சட்டங்களை திரும்ப பெறுவதாக பிரதமர் மோடி நேரடியாகவே வேண்டுகோள் விடுத்தார். பிரதமருக்கு மதிப்பளித்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு ஓராண்டு நிறைவு பெற்று பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த பட்ஜெட் பிரதமர் உத்தரவாதத்தை நிறைவேற்றுகிற வகையில் அமையும் என்று எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் அதற்கு நேர் மாறாக விவசாயிகளுக்கு இரட்டிப்பு வருவாய் கொடுக்கிற லாபகரமான விலை குறித்து எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை. அதுபோல வேளாண் விரோத சட்டங்களை திரும்ப பெறுவதாக அறிவித்தாரே தவிர, இரண்டாண்டு காலம் அந்த சட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் தடை தொடரும் நிலையில் மறைமுகமாக வேளாண் சட்டங்களுக்கான திட்டங்களை முன்னிறுத்தி தான் இந்த பட்ஜெட் வெளிவந்திருக்கிறது. வேளாண் சட்டங்களை ஏற்கனவே கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதரவாக தான் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.மறைமுகமாக அதற்கேற்ப பட்ஜெட் திட்டங்களும் கார்ப்பரேட்டுகள் ஆதரவாக உள்ளது. குறிப்பாக 20 லட்சம் கோடி வேளாண் கடன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு மிகைப்படுத்தப்படுகிறது. உண்மையிலேயே வேளாண் கடன் வாங்குவதற்கு இந்தியாவில் 80% விவசாயிகளுக்கு தகுதியில்லை என வங்கிகள் கருப்பு பட்டியலில் இணைத்து விட்டனர்.அது மட்டும் இன்றி மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவிக்கிற கடன்களை வழங்க மாட்டோம். எங்களுக்கு ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல் படி மட்டுமே கடன் வழங்க முடியும் என்று விவசாயிகளுக்கு வங்கிகள் கடன் கொடுக்க மருத்துவிடுகிறார்கள். அப்படியானால் விவசாயிகளுக்கு 20 லட்சம் கோடி கடனை கொடுப்பதற்கு என்ன நிதி திட்டமிடல் என்ன? என்பது கேள்வியாக உள்ளது. விவசாயிகள் லாபம் பெறுகிற வகையில் ஏற்றுமதி இறக்குமதி கொள்கை அமைய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். ஆனால் மிகை உற்பத்தி காலத்தில் ஏற்றுமதிக்கு தடை விதிப்பதும்,அடிமாட்டு விலைக்கு இடைத்தரர்கள் கார்ப்பரேட்டுகளோடு இணைந்து கொள்முதல் செய்து கிடங்குகளில் இருப்பு வைப்பதற்கு அனுமதிக்கப்படுகிறது. தட்டுப்பாடு காலத்தில் உள்நாட்டிலேயே கூடுதல் விலைக்கு விற்பனை செய்து கொள்ளை லாபம் அடிக்க வழிவகுக்கிறது. குறிப்பாக பதுக்கல் காரர்கள் தான் வேளாண்மைக்கு ஒதுக்கப்படுகிற கடன்தொகை முழுவதையும் கிடங்குகளில் இருப்பு வைக்கும் உணவு தானிய பொருட்களை இருப்பு காட்டி வங்கிகளில் வட்டி சலுகைகளையுடன் கடன் பெற்று முழு பயனையும் கார்ப்பரேட்டுகள் அடையும் நிலை உள்ளது. உதாரணத்திற்குஅரிசிக்கு கடந்த அக்டோபர் மாதம் முதல் ஆறு மாத காலம் தடை விதித்திருக்கிறார்கள். இதனால் உற்பத்தி மிகையாக இருக்கிற இக்காலத்தில் தடையால் விவசாயிகளுக்கு நெல்லுக்கு லாபகரமான விலை கிடைப்பது தடுக்கப்பட்டுள்ளது. நெல்லை அடிமாட்டு விலைக்கு வாங்கி கிடங்குகளில் பதிக்கி வைத்து விற்பதற்கு சாதகமான சட்டங்களை முன்கூட்டியே கொண்டு வந்து விட்டு விவசாயிகளுக்கு 20 லட்சம் கோடி நிதி ஒதுக்குகிறோம் என்கிற பெயரில் மிகைப்படுத்தி விவசாயிகளை ஏமாற்றவும், இந்தியாவில்விவசாயி மீது தவறான பார்வையை திருப்பவும் பட்ஜெட் மூலம் மத்திய அரசு முயற்சிக்கிறது. எனவே பட்ஜெட் கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமான முறையிலே கொண்டுவரப்பட்டிருக்கிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம். உடனடியாக மத்திய அரசு பிரதமர் அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையில் லாபகரமான விலை கிடைப்பதற்கான சட்டத்தையும், விவசாயிகளுக்கு சாதகமான ஏற்றுமதி இறக்குமதி சந்தைப்படுத்துவதற்கான சட்ட முறைகளையும் கொண்டு வருவதற்கு முயற்சிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். இல்லையேல் மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமாகும் என எச்சரிக்கிறேன் என்றார். தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் திருவாரூர் மாவட்ட செயலாளர் குடவாசல் சரவணன் மாநிலத் துணைச் செயலாளர் எம் செந்தில் குமார் கோட்டூர் தெற்கு ஒன்றிய செயலாளர் எம் தெய்வமணி வலங்கைமான் ஒன்றிய செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.மத்திய அரசின் பட்ஜெட் கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமானது பிஆர்.பாண்டியன் எச்சரிக்கை தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி ஆர் பாண்டியன் மன்னார்குடியில் மத்திய அரசின் பட்ஜெட் குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: மத்திய அரசு மோடி தலைமையிலான ஆட்சியின் இரண்டாவது ஆட்சி காலத்தின இறுதி கட்டபட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாகவே பாரதிய ஜனதா கட்சியும்,மத்திய அரசும் மாறி மாறி 2022க்குள் விவசாயிகளுடைய வருவாயை இரட்டிப்பாக்குவோம் என்று உத்திரவாதம் அளித்தது. ஆனால் இன்றைக்கு 2022 முடிந்து 2023 ஆம் ஆண்டு துவக்கத்தில் வரும் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்கிற முன்னோட்டமான இந்த பட்ஜெட்டில் விவசாயிகள் வருவாய் இரட்டிப்பாகுவதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் ஏமாற்றம் அளிக்கிறது. வேளாண் வளர்ச்சிக்கான அனைத்து கொள்கை திட்டங்களும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தயாரித்த மறைமுக அறிக்கையாகவே பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. குறிப்பாக விவசாயிகள் ஓராண்டு காலம் வேளாண் விரோத சட்டங்களுக்கு எதிராகவும் குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டம் கொண்டு வர வலியுறுத்தி போராடி வந்தார்கள். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வாருங்கள் நான் குறைந்தபட்ச ஆதார விலை தருவதோடு, வேளாண் விரோத சட்டங்களை திரும்ப பெறுவதாக பிரதமர் மோடி நேரடியாகவே வேண்டுகோள் விடுத்தார். பிரதமருக்கு மதிப்பளித்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு ஓராண்டு நிறைவு பெற்று பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த பட்ஜெட் பிரதமர் உத்தரவாதத்தை நிறைவேற்றுகிற வகையில் அமையும் என்று எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் அதற்கு நேர் மாறாக விவசாயிகளுக்கு இரட்டிப்பு வருவாய் கொடுக்கிற லாபகரமான விலை குறித்து எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை. அதுபோல வேளாண் விரோத சட்டங்களை திரும்ப பெறுவதாக அறிவித்தாரே தவிர, இரண்டாண்டு காலம் அந்த சட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் தடை தொடரும் நிலையில் மறைமுகமாக வேளாண் சட்டங்களுக்கான திட்டங்களை முன்னிறுத்தி தான் இந்த பட்ஜெட் வெளிவந்திருக்கிறது. வேளாண் சட்டங்களை ஏற்கனவே கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதரவாக தான் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.மறைமுகமாக அதற்கேற்ப பட்ஜெட் திட்டங்களும் கார்ப்பரேட்டுகள் ஆதரவாக உள்ளது. குறிப்பாக 20 லட்சம் கோடி வேளாண் கடன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு மிகைப்படுத்தப்படுகிறது. உண்மையிலேயே வேளாண் கடன் வாங்குவதற்கு இந்தியாவில் 80% விவசாயிகளுக்கு தகுதியில்லை என வங்கிகள் கருப்பு பட்டியலில் இணைத்து விட்டனர்.அது மட்டும் இன்றி மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவிக்கிற கடன்களை வழங்க மாட்டோம். எங்களுக்கு ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல் படி மட்டுமே கடன் வழங்க முடியும் என்று விவசாயிகளுக்கு வங்கிகள் கடன் கொடுக்க மருத்துவிடுகிறார்கள். அப்படியானால் விவசாயிகளுக்கு 20 லட்சம் கோடி கடனை கொடுப்பதற்கு என்ன நிதி திட்டமிடல் என்ன? என்பது கேள்வியாக உள்ளது. விவசாயிகள் லாபம் பெறுகிற வகையில் ஏற்றுமதி இறக்குமதி கொள்கை அமைய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். ஆனால் மிகை உற்பத்தி காலத்தில் ஏற்றுமதிக்கு தடை விதிப்பதும்,அடிமாட்டு விலைக்கு இடைத்தரர்கள் கார்ப்பரேட்டுகளோடு இணைந்து கொள்முதல் செய்து கிடங்குகளில் இருப்பு வைப்பதற்கு அனுமதிக்கப்படுகிறது. தட்டுப்பாடு காலத்தில் உள்நாட்டிலேயே கூடுதல் விலைக்கு விற்பனை செய்து கொள்ளை லாபம் அடிக்க வழிவகுக்கிறது. குறிப்பாக பதுக்கல் காரர்கள் தான் வேளாண்மைக்கு ஒதுக்கப்படுகிற கடன்தொகை முழுவதையும் கிடங்குகளில் இருப்பு வைக்கும் உணவு தானிய பொருட்களை இருப்பு காட்டி வங்கிகளில் வட்டி சலுகைகளையுடன் கடன் பெற்று முழு பயனையும் கார்ப்பரேட்டுகள் அடையும் நிலை உள்ளது. உதாரணத்திற்குஅரிசிக்கு கடந்த அக்டோபர் மாதம் முதல் ஆறு மாத காலம் தடை விதித்திருக்கிறார்கள். இதனால் உற்பத்தி மிகையாக இருக்கிற இக்காலத்தில் தடையால் விவசாயிகளுக்கு நெல்லுக்கு லாபகரமான விலை கிடைப்பது தடுக்கப்பட்டுள்ளது. நெல்லை அடிமாட்டு விலைக்கு வாங்கி கிடங்குகளில் பதிக்கி வைத்து விற்பதற்கு சாதகமான சட்டங்களை முன்கூட்டியே கொண்டு வந்து விட்டு விவசாயிகளுக்கு 20 லட்சம் கோடி நிதி ஒதுக்குகிறோம் என்கிற பெயரில் மிகைப்படுத்தி விவசாயிகளை ஏமாற்றவும், இந்தியாவில்விவசாயி மீது தவறான பார்வையை திருப்பவும் பட்ஜெட் மூலம் மத்திய அரசு முயற்சிக்கிறது. எனவே பட்ஜெட் கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமான முறையிலே கொண்டுவரப்பட்டிருக்கிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம். உடனடியாக மத்திய அரசு பிரதமர் அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையில் லாபகரமான விலை கிடைப்பதற்கான சட்டத்தையும், விவசாயிகளுக்கு சாதகமான ஏற்றுமதி இறக்குமதி சந்தைப்படுத்துவதற்கான சட்ட முறைகளையும் கொண்டு வருவதற்கு முயற்சிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். இல்லையேல் மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமாகும் என எச்சரிக்கிறேன் என்றார். தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் திருவாரூர் மாவட்ட செயலாளர் குடவாசல் சரவணன் மாநிலத் துணைச் செயலாளர் எம் செந்தில் குமார் கோட்டூர் தெற்கு ஒன்றிய செயலாளர் எம் தெய்வமணி வலங்கைமான் ஒன்றிய செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
மத்திய அரசின் பட்ஜெட் கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமானது
பிஆர்.பாண்டியன் எச்சரிக்கை 

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி ஆர் பாண்டியன் மன்னார்குடியில் மத்திய அரசின் பட்ஜெட் குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: 

மத்திய அரசு மோடி தலைமையிலான ஆட்சியின் இரண்டாவது ஆட்சி காலத்தின இறுதி கட்டபட்ஜெட்டாக  தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாகவே பாரதிய ஜனதா கட்சியும்,மத்திய அரசும் மாறி மாறி 2022க்குள் விவசாயிகளுடைய வருவாயை இரட்டிப்பாக்குவோம் என்று உத்திரவாதம் அளித்தது. ஆனால் இன்றைக்கு 2022 முடிந்து 2023 ஆம் ஆண்டு துவக்கத்தில் வரும் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்கிற முன்னோட்டமான இந்த பட்ஜெட்டில் விவசாயிகள் வருவாய் இரட்டிப்பாகுவதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் ஏமாற்றம் அளிக்கிறது.  

வேளாண் வளர்ச்சிக்கான அனைத்து கொள்கை திட்டங்களும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தயாரித்த மறைமுக அறிக்கையாகவே பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. 

குறிப்பாக விவசாயிகள் ஓராண்டு காலம் வேளாண் விரோத சட்டங்களுக்கு எதிராகவும் குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டம் கொண்டு வர வலியுறுத்தி போராடி வந்தார்கள். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வாருங்கள் நான் குறைந்தபட்ச ஆதார விலை தருவதோடு, வேளாண் விரோத சட்டங்களை திரும்ப பெறுவதாக பிரதமர் மோடி நேரடியாகவே வேண்டுகோள் விடுத்தார். பிரதமருக்கு மதிப்பளித்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு ஓராண்டு நிறைவு பெற்று பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த பட்ஜெட் பிரதமர் உத்தரவாதத்தை நிறைவேற்றுகிற வகையில் அமையும் என்று எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் அதற்கு நேர் மாறாக விவசாயிகளுக்கு இரட்டிப்பு வருவாய் கொடுக்கிற லாபகரமான விலை குறித்து எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை. 

அதுபோல வேளாண் விரோத சட்டங்களை திரும்ப பெறுவதாக அறிவித்தாரே தவிர, இரண்டாண்டு காலம் அந்த சட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் தடை  தொடரும் நிலையில் மறைமுகமாக வேளாண் சட்டங்களுக்கான திட்டங்களை முன்னிறுத்தி தான் இந்த பட்ஜெட் வெளிவந்திருக்கிறது.

வேளாண் சட்டங்களை ஏற்கனவே கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதரவாக தான் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.மறைமுகமாக அதற்கேற்ப பட்ஜெட் திட்டங்களும் கார்ப்பரேட்டுகள் ஆதரவாக உள்ளது. 

குறிப்பாக 20 லட்சம் கோடி வேளாண் கடன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு மிகைப்படுத்தப்படுகிறது. உண்மையிலேயே வேளாண் கடன் வாங்குவதற்கு இந்தியாவில் 80% விவசாயிகளுக்கு தகுதியில்லை என வங்கிகள் கருப்பு பட்டியலில் இணைத்து விட்டனர்.அது மட்டும் இன்றி மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவிக்கிற  கடன்களை வழங்க மாட்டோம். எங்களுக்கு ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல் படி மட்டுமே கடன் வழங்க முடியும் என்று விவசாயிகளுக்கு வங்கிகள் கடன் கொடுக்க மருத்துவிடுகிறார்கள். அப்படியானால் விவசாயிகளுக்கு 20 லட்சம் கோடி கடனை கொடுப்பதற்கு என்ன நிதி திட்டமிடல் என்ன? என்பது கேள்வியாக உள்ளது. 

விவசாயிகள் லாபம் பெறுகிற வகையில் ஏற்றுமதி இறக்குமதி கொள்கை அமைய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். ஆனால் மிகை உற்பத்தி காலத்தில் ஏற்றுமதிக்கு தடை விதிப்பதும்,அடிமாட்டு விலைக்கு இடைத்தரர்கள் கார்ப்பரேட்டுகளோடு இணைந்து கொள்முதல் செய்து கிடங்குகளில் இருப்பு வைப்பதற்கு அனுமதிக்கப்படுகிறது. தட்டுப்பாடு காலத்தில் உள்நாட்டிலேயே கூடுதல் விலைக்கு விற்பனை செய்து கொள்ளை லாபம் அடிக்க வழிவகுக்கிறது. 

குறிப்பாக பதுக்கல் காரர்கள் தான் வேளாண்மைக்கு ஒதுக்கப்படுகிற கடன்தொகை முழுவதையும் கிடங்குகளில் இருப்பு வைக்கும் உணவு தானிய பொருட்களை இருப்பு காட்டி வங்கிகளில் வட்டி சலுகைகளையுடன் கடன் பெற்று முழு பயனையும் கார்ப்பரேட்டுகள் அடையும்  நிலை உள்ளது.   

உதாரணத்திற்குஅரிசிக்கு கடந்த அக்டோபர் மாதம் முதல் ஆறு மாத காலம் தடை விதித்திருக்கிறார்கள். இதனால் உற்பத்தி மிகையாக இருக்கிற இக்காலத்தில் தடையால் விவசாயிகளுக்கு நெல்லுக்கு லாபகரமான விலை கிடைப்பது தடுக்கப்பட்டுள்ளது. நெல்லை அடிமாட்டு விலைக்கு வாங்கி கிடங்குகளில் பதிக்கி வைத்து விற்பதற்கு சாதகமான சட்டங்களை முன்கூட்டியே கொண்டு வந்து விட்டு விவசாயிகளுக்கு 20 லட்சம் கோடி நிதி ஒதுக்குகிறோம் என்கிற பெயரில் மிகைப்படுத்தி விவசாயிகளை ஏமாற்றவும், இந்தியாவில்விவசாயி மீது தவறான பார்வையை திருப்பவும்  பட்ஜெட் மூலம் மத்திய அரசு முயற்சிக்கிறது.

எனவே பட்ஜெட் கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமான முறையிலே கொண்டுவரப்பட்டிருக்கிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம். உடனடியாக மத்திய அரசு பிரதமர் அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையில் லாபகரமான விலை கிடைப்பதற்கான சட்டத்தையும், விவசாயிகளுக்கு சாதகமான ஏற்றுமதி இறக்குமதி சந்தைப்படுத்துவதற்கான சட்ட முறைகளையும் கொண்டு வருவதற்கு முயற்சிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். இல்லையேல் மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமாகும் என எச்சரிக்கிறேன் என்றார்.

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் திருவாரூர் மாவட்ட செயலாளர் குடவாசல் சரவணன் மாநிலத் துணைச் செயலாளர் எம் செந்தில் குமார் கோட்டூர் தெற்கு ஒன்றிய செயலாளர் எம் தெய்வமணி வலங்கைமான் ஒன்றிய செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *